சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செக் மோசடி வழக்கில் கைதான எஸ்.ஐ., சஸ்பெண்ட்

Added : அக் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை: செக் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.ஐ., யை கோவை சரக டி.ஐ.ஜி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வருபவர் முருகன். இவர் கடந்த மாதம், 22 ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வரும் அமித்குமார் சென்னை கீழ்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், செக் மோசடி
செக் மோசடி வழக்கில் கைதான எஸ்.ஐ., சஸ்பெண்ட்

கோவை: செக் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.ஐ., யை கோவை சரக டி.ஐ.ஜி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வருபவர் முருகன். இவர் கடந்த மாதம், 22 ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வரும் அமித்குமார் சென்னை கீழ்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், செக் மோசடி புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஆறாவது குற்றவாளியாக முருகன் சேர்க்கப்பட்டார்.

விசாரணையில், முருகன் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்.ஐ., முருகன் மருத்துவ விடுப்பில் இருந்த போது இக்குற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி , முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
09-அக்-202106:45:56 IST Report Abuse
 Muruga Vel பொதுவா போலீஸ் கேஷ்ல தானே டீல் பண்ணுவாங்க
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-அக்-202105:51:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சஸ்பெண்ட் மட்டும் தான். சம்பளம் கிடைக்கும். கிரிமினல் குற்றவாளிக்கு ஏன் டிஸ்மிஸ், சிறைத்தண்டனை கொடுப்பதில்லை. அரசு ஊழியன் பண்ணா அது தப்பாகாதா ? அப்படி தப்பில்லை என்று சொல்லும் உளுத்த சட்டம் எதுக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X