பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ஏற்று, இறக்கு கூலி லாரி ஓனர்கள் கைவிரிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:''இனி, லாரிகளில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் கூலியை, சரக்கு உரிமையாளர்களே ஏற்க வேண்டும்,'' என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:லாரிகளில் சரக்கு ஏற்றி, இறக்கும் பொறுப்பை, லாரி உரிமையாளர்கள் ஏற்பதால், பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சரக்கு ஏற்றி, இறக்கும் கூலியை, சரக்குக்கு சொந்தமான உரிமையாளர்களே ஏற்க

சென்னை:''இனி, லாரிகளில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் கூலியை, சரக்கு உரிமையாளர்களே ஏற்க வேண்டும்,'' என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:லாரிகளில் சரக்கு ஏற்றி, இறக்கும் பொறுப்பை, லாரி உரிமையாளர்கள் ஏற்பதால், பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சரக்கு ஏற்றி, இறக்கும் கூலியை, சரக்குக்கு சொந்தமான உரிமையாளர்களே ஏற்க வேண்டும். வரும், 15ம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

அதாவது, 10 டன் சரக்கை ஏற்றி, இறக்கும் கூலி, தமிழக மாவட்டங்களுக்கு உள்ளும், வெளி மாநிலங்களுக்கு இடையேயும் வேறுபடுகிறது. குறிப்பாக, தமிழகத்துக்குள் ஏற்றி, இறக்கப்படும் சரக்குக்கு ஒரு வகையான கூலியும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்குகளுக்கு வேறு மாதிரியான கூலியும் வசூலிக்கின்றனர். அட்டி கூலி, தார்ப்பாய் கட்டும் கூலி என பல வகைகளில் பல ஆயிரம் ரூபாயை வசூலிக்கின்றனர்.

அத்துடன், ஓட்டுனர்களும் குறிப்பிட்ட தொகையை ஏற்றி கணக்கெழுதி வசூலிக்கின்றனர். இதனால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த சிக்கல்களில் இருந்து விடுபடவே, சரக்கு ஏற்றி விடுபவர், இறக்கிக் கொள்பவர் என அவர்களே கூலியை கொடுத்து விட்டால், நாங்கள் நிம்மதி அடைவோம். அவ்வாறு கொடுப்பவரிடம், வாடகையை குறைத்து வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X