பொது செய்தி

இந்தியா

சுற்றுலா பயணியருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., புதிய திட்டங்கள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மைசூரு:தசராவை முன்னிட்டு சுற்றுலா பயணியரின் வசதிக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா சலுகையை அறிவித்துள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:தசரா துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணியர், மைசூருக்கு வருகை தருகின்றனர். இவர்களுக்கு வசதியாக கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில் சிறப்பு சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாளை முதல் 24 வரை, 'கிரி தர்ஷினி, தேவதர்ஷினி,

மைசூரு:தசராவை முன்னிட்டு சுற்றுலா பயணியரின் வசதிக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா சலுகையை அறிவித்துள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:தசரா துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணியர், மைசூருக்கு வருகை தருகின்றனர். இவர்களுக்கு வசதியாக கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில் சிறப்பு சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாளை முதல் 24 வரை, 'கிரி தர்ஷினி, தேவதர்ஷினி, ஜலதர்ஷினி' பேக்கேஜ்கள் மூலம், சுற்றுலா தலங்களை காணலாம்.

பயணியர் டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. கிரி தர்ஷினி திட்டத்தில், மைசூரு மத்திய பஸ் நிலையத்திலிருந்து, காலை 6:30 மணிக்கு பஸ் புறப்படும்; பண்டிப்பூர், கோபாலசுவாமி மலை, பிலிகிரிரங்கன மலை, நஞ்சன்கூடு, சாமுண்டி மலை உட்பட 325 கி.மீ., செல்லும்.இதில் பெரியவர்களுக்கு 350 ரூபாய்; சிறியவர்களுக்கு 175 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜல தர்ஷினி திட்டத்தில் அணைகள், நீர் வீழ்ச்சிகளை பார்க்கலாம். மைசூரு மத்திய பஸ் நிலையத்திலிருந்து காலை 6:30 மணிக்கு பஸ் புறப்பட்டு கோல்டன் டெம்பிள், நிசர்கதாமா, துபாரே வனம், சிக்கஹொளே அணை.ராஜா சீட், அபி, ஹாரங்கி, கே.ஆர்.எஸ்., உட்பட 350 கி.மீ., பயணிக்கும். பெரியவர்களுக்கு 400 ரூபாய், சிறியவர்களுக்கு 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவ தர்ஷினி திட்டத்தில் கோவில்களை பார்க்கலாம். இந்த பஸ்சும் மைசூரு மத்திய பஸ் நிலையத்திலிருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும்.

நஞ்சன்கூடு, தலக்காடு, பிளப், முடுகுதொரே, சோமநாதபுரம்.ஸ்ரீரங்கப்பட்டணா, கே.ஆர்.எஸ்., உட்பட 250 கி.மீ., தொலைவில் பயணிக்கும். பெரியவர்களுக்கு 275 ரூபாய்; சிறியவர்களுக்கு 140 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைசூரு மத்திய பஸ் நிலையம், கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் அவ்தார் டிக்கெட் புக்கிங் சென்டர், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X