ஊழியருக்கு வைத்த குறி; மகன் பரிதாப பலி

Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மங்களூரு:தட்சிண கன்னடா மங்களூரு நகரில், 'வைஷ்ணவி எக்ஸ்பிரஸ் கார்கோ' என்ற பெயரில், ராஜேஷ் பிரபு என்பவர், தொழிற்சாலை நடத்தி வருகிறார்.தொழிற்சாலையில் ஓட்டுனர், கிளினராக பணியாற்றும் சந்துரு, அஷ்ரப் சில நாட்களுக்கு முன், பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் சேர்த்தனர். இதற்காக அவர்களுக்கு 4,000 ரூபாய் கொடுக்கும்படி கேட்டனர். தொழிலதிபர் பணம் கொடுக்கவில்லை.இதே விஷயமாக,

மங்களூரு:தட்சிண கன்னடா மங்களூரு நகரில், 'வைஷ்ணவி எக்ஸ்பிரஸ் கார்கோ' என்ற பெயரில், ராஜேஷ் பிரபு என்பவர், தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

தொழிற்சாலையில் ஓட்டுனர், கிளினராக பணியாற்றும் சந்துரு, அஷ்ரப் சில நாட்களுக்கு முன், பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் சேர்த்தனர். இதற்காக அவர்களுக்கு 4,000 ரூபாய் கொடுக்கும்படி கேட்டனர். தொழிலதிபர் பணம் கொடுக்கவில்லை.இதே விஷயமாக, இவருக்கும், தொழிலாளர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

அக்டோபர் 5ல், மதியம் மனைவி, மகனுடன் அலுவலகத்துக்கு வந்தார்.அப்போது தொழிலாளர்கள் பணத்தை கேட்டதால், வாக்குவாதம் நடந்து, குழப்ப நிலை உருவானது. இவ்வேளையில் கோபமடைந்த தொழிலதிபர் ராஜேஷ் பிரபு, துப்பாக்கியால் தொழிலாளர்களை நோக்கி, இரண்டு முறை சுட்டார்.

இதில் ஒரு குண்டு குறி தவறி, தொழிலதிபரின் மகன் சுதீந்திரா, 14, தலையில் பாய்ந்தது. தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
09-அக்-202106:44:42 IST Report Abuse
 Muruga Vel நல்ல தோட்டா கெட்ட தோட்டா எல்லாம் கிடையாது ..சுட்டா மரணம் நிச்சயம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X