பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆற்றில் மருத்துவ கழிவுகள்: ஆபத்து என ஐ.ஐ.டி., எச்சரிக்கை

Updated : அக் 10, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:காவிரி ஆற்றில், பிளாஸ்டிக், பூச்சிகொல்லி மற்றும் மருத்துவ கழிவுகளின் கலப்பு அதிகரித்துள்ளதாகவும், அதனால் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்து உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின், நீர் தொழில்நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி கவுன்சில்ஆகியவற்றின்
 காவிரி ஆற்றில் மருத்துவ கழிவுகள்: ஆபத்து என ஐ.ஐ.டி., எச்சரிக்கை

சென்னை:காவிரி ஆற்றில், பிளாஸ்டிக், பூச்சிகொல்லி மற்றும் மருத்துவ கழிவுகளின் கலப்பு அதிகரித்துள்ளதாகவும், அதனால் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்து உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின், நீர் தொழில்நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி கவுன்சில்ஆகியவற்றின் நிதி உதவியுடன், உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., குழுவால், காவிரி நீர் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் லிஜி பிலிப், கணபதி, நிதா ஆகியோர் ஆய்வு குழுவில் இடம் பெற்றனர்.

இது குறித்த ஆய்வறிக்கை, ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஜெயகுமார் ரங்கநாதன், இன்ஸமாம் உல் ஹக், காமராஜ் ராமகிருஷ்ணன், மந்திரம் கார்த்திக் மற்றும் பேராசிரியர் லிஜி பிலிப் ஆகியோரால் வெளியிடப்பட்டு உள்ளது.ஆராய்ச்சி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி ஆற்றில், நீரின் தரத்தை இரண்டு ஆண்டுகளாக கண்காணித்து, அதிகரித்து வரும் மாசு கண்டறியப்பட்டுள்ளது. 22 இடங்களில் தண்ணீர் சேகரிக்கப்பட்டது. இதில், காவிரி ஆற்று நீரில் பல வகை மாசுக்கள் கண்டறியப்பட்டு உள்ளன. மழை காலத்துக்கு பின், ஆற்றில் நீர் ஓட்டம் குறையும் போது, பல பகுதிகளில் இருந்து கலக்கும் கழிவுகளால், பல்வேறு வகை மாசு அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயனம், அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் கலந்திருப்பது தெரிகிறது.

நன்னீர் உள்வாங்கும் இடங்களில் கூட, அதிக அளவு மருத்துவ கழிவுகள் நிறைந்துள்ளன. இந்த ஆய்வின் கண்டு பிடிப்புகள், மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. தற்போதைய முடிவுகள் சுற்றுச்சூழல், நதிநீர் அமைப்பின் உயிரினங்கள் போன்றவற்றுக்கு, அதிக ஆபத்தை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் மருத்துவ கழிவு பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரித்துள்ளது. அவற்றை நீர்நிலைகளில் வெளியிடும் போது, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.எனவே, இந்த மாசு பொருட்களை நீர்நிலைகளில் குறைக்கும் வகையில், கழிவு நீரை ஆற்றில் விடும் முன் சுத்திகரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கலப்பது என்னென்ன?

காவிரி நீரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஆர்சனிக், துத்தநாகம், குரோமியம், ஈயம் மற்றும் நிக்கல் போன்ற உலோகங்களால், அதிக மாசு ஏற்பட்டுள்ளது. மேலும், 'இபூ ப்ரூபென், டைக்லோபெனக்' போன்ற, 'அலர்ஜி' எதிர்ப்பு மருந்துகள்; 'அடினோலால் மற்றும் ஐசோபிரெனலைன்' போன்ற உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள்.

'பெரிண்டோ பிரில்' போன்ற நொதி தடுப்பான்கள்; 'காபின்' போன்ற ஊக்க மருந்துகள்; 'கார்பமாசெபைன்' போன்ற மன அழுத்தத்திற்குஎதிரான மருந்துகள்; 'சிப்ரோப்ளாக்ஸின்' போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அதிகமாக கலந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளின் கழிவுகள், எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல், ஆற்றில் நேரடியாக விடப்படுவதால், காவிரி நீருக்கு கேடு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
09-அக்-202123:13:37 IST Report Abuse
John Miller பழைய மந்திரி கோடிக்கணக்கில் காசை வாங்கி கொண்டு மக்கள் சோப்பு போட்டு குளித்தால் வந்த கழிவு என்றாரன். அவனை இன்னும் உள்ளே தள்ளவில்லை இந்த அரசு.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
09-அக்-202122:38:39 IST Report Abuse
N Annamalai தமிழகத்தில் தான் கலக்க படுகிறது .கோடிக்கணக்கான மக்களும் பிற உயிர் இனங்களும் குடிக்கும் பயன் படுத்தும் நீரை கெடுப்பது பெரிய குற்றம் இல்லையா ?.யார் இதை கேள்வி கேட்பது ?.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-அக்-202121:28:26 IST Report Abuse
RajanRajan இது திராவிட தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறவில்லை. எனவே இது பற்றிய விவரம் ரிஜெக்டெட். இடத்தை காலி பண்ணுங்க விடியல் துவங்குற நேரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X