கூட்டுறவு சங்க தலைவர் சஸ்பெண்ட் சட்ட திருத்தம் எதிர்த்த மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க தலைவர் 'சஸ்பெண்ட்' சட்ட திருத்தம் எதிர்த்த மனு தள்ளுபடி

Added : அக் 08, 2021
Share
சென்னை:'கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில், புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவின்படி, கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்யலாம்.இந்த புதிய பிரிவை எதிர்த்து,

சென்னை:'கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில், புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவின்படி, கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்யலாம்.இந்த புதிய பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரம்பூர் கூட்டுறவு கட்டட சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி என்பவர், மனு தாக்கல் செய்தார்.

இம்மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.கூட்டுறவு சங்கத்தை கலைக்கவும், நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யவும் ஏற்கனவே அதிகாரம் இருக்கும் போது, தற்காலிக பதவி நீக்கத்துக்கான பிரிவு தேவையற்றது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, ''தவறான நிர்வாகம், முறைகேடுகளில் ஈடுபடும் போது, தலைவர் மற்றும் துணைத் தலைவரை தற்காலிக பதவி நீக்கம்செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கூடாது,'' என்றார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்றாலோ, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்தாலோ மட்டுமே, ஒரு சட்டத்தை ரத்து செய்ய முடியும்.

தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு எதிராக கையாடல், தவறான நிர்வாகம் குறித்த புகாருக்குஆரம்பகட்ட ஆதாரம் இருந்ததால், பொது நலன் கருதி, சங்கத்தின் நலன் கருதி, 'சஸ்பெண்ட்' செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டு, அதற்கான ஆரம்பகட்ட ஆதாரம் இருக்கும் போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரிவை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகவோ, சட்டவிரோதம் என்றோ கூற முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X