பொது செய்தி

இந்தியா

இரவு 7:00 முதல் காலை 10:00 வரை பிரசாரத்துக்கு தடை

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு:'கொரோனா பீதியால் இடைத்தேர்தலில் இரவு 7:00 மணி முதல் காலை 10:00 மணி வரை, பிரசாரம் செய்யக்கூடாது' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:கொரோனா பரவும் என்பதால் சிந்தகி, ஹானகல் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரவு 7:00 மணி முதல் காலை 10:00 மணி வரை பிரசாரத்துக்கு செல்லக்கூடாது.ஓட்டுச்சாவடிகள், ஓட்டு

பெங்களூரு:'கொரோனா பீதியால் இடைத்தேர்தலில் இரவு 7:00 மணி முதல் காலை 10:00 மணி வரை, பிரசாரம் செய்யக்கூடாது' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:கொரோனா பரவும் என்பதால் சிந்தகி, ஹானகல் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரவு 7:00 மணி முதல் காலை 10:00 மணி வரை பிரசாரத்துக்கு செல்லக்கூடாது.

ஓட்டுச்சாவடிகள், ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.ஒரு டோஸ் பெற்றுள்ளவர்கள், ஓட்டு எண்ணிக்கை தினத்தின், 72 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்து அறிக்கை வைத்திருக்க வேண்டும்.

முதல் டோஸ் பெறாதவர்கள், 48 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து, ஓட்டு எண்ணிக்கை மையங்களின் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்த பின், பணிக்கு ஆஜராக வேண்டும். ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 48 மணி நேரம் மதுபானம் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். வேட்பாளர்களின் தேர்தல் செலவு, 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X