பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரிகளில் பிஎச்.டி., புதிய பிரிவுகள் அறிமுகம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிய பாட பிரிவுகளில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:அரசு கலை, அறிவியல்கல்லுாரிகளில், பிஎச்.டி.,ஆராய்ச்சி படிப்பில், புதிய பாட பிரிவுகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செங்கல்பட்டு அரசு கலை

சென்னை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிய பாட பிரிவுகளில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:அரசு கலை, அறிவியல்கல்லுாரிகளில், பிஎச்.டி.,ஆராய்ச்சி படிப்பில், புதிய பாட பிரிவுகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு அரசு கலை கல்லுாரியில், வணிகவியல்; சேலம் கல்லுாரியில், தாவரவியல்; கோவை அரசு கலை கல்லுாரியில், தகவல் தொழில்நுட்பம்; நாமக்கல் அறிஞர் அண்ணா கலை கல்லுாரியில், விலங்கியல் பாட பிரிவுகளில், ஆராய்ச்சி படிப்பு துவங்கலாம். திருச்சி ஈ.வெ.ரா. கல்லுாரியில், உயிர் வேதியியல்; திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லுாரியில், ஆங்கிலம்; கும்பகோணம் அரசு கலை கல்லுாரியில், இயற்பியல்; கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ். சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலை கல்லுாரியில், ஆங்கிலம்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில், சர்வதேச வணிகம் பாட பிரிவுகளில் ஆராய்ச்சி பிரிவு துவக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X