ஐந்து மாடி கட்டடத்தில் வசித்தவர்கள் கதறல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கஸ்துாரி நகர்:பெங்களூரு கஸ்துாரி நகரில் நேற்று முன்தினம் பகலில், ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் மொத்தம் எட்டு வீடுகள் இருந்தன. மூன்று வீடுகளில் மட்டுமே மக்கள் வசித்து வந்தனர். மற்றவை காலியாகவே இருந்தன.நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி அளவில் வீடு ஆடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனவே அதில் குடியிருந்தோர் உடனடியாக வெளியே ஓடி வந்தனர்.அவர்கள் வெளியில் வந்த

கஸ்துாரி நகர்:பெங்களூரு கஸ்துாரி நகரில் நேற்று முன்தினம் பகலில், ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் மொத்தம் எட்டு வீடுகள் இருந்தன. மூன்று வீடுகளில் மட்டுமே மக்கள் வசித்து வந்தனர். மற்றவை காலியாகவே இருந்தன.
நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி அளவில் வீடு ஆடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனவே அதில் குடியிருந்தோர் உடனடியாக வெளியே ஓடி வந்தனர்.அவர்கள் வெளியில் வந்த சிறிது நேரத்தில், குடியிருப்புவாசிகளின் கண் முன்னேயே கட்டடம் இடிந்தது.இதில், விலைமதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

அவர்கள் கூறுகையில், 'இத்தனை நாள், நாங்கள் சம்பாதித்த பணத்தை இதில் முதலீடு செய்துள்ளோம். விலை உயர்ந்த பொருட்களாக வாங்கி போட்டுள்ளோம். நாங்கள் வேறு வீட்டுக்கு செல்லவும் பணம் இல்லை' என, கதறினர்.

இந்த இடத்தில் மூன்று அடுக்கு மாடிகள் மட்டுமே கட்ட பி.பி.எம்.பி., அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் உரிமையாளர், விதிமுறையை மீறி ஐந்து மாடிகள் கட்டியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஆயுஷ் பெய்க்கை, கஸ்துாரி நகர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X