பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் கோதுமை உயர்த்தி தர கோரிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் கடைகளில் கோதுமை அளவை உயர்த்தி வழங்குமாறு, அரசுக்கு கார்டுதாரர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் வசிப்போர், தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில் அரிசிக்கு பதில், 10 கிலோ; மற்ற பகுதிகளில்
 ரேஷனில் கோதுமை உயர்த்தி தர கோரிக்கை

சென்னை:ரேஷன் கடைகளில் கோதுமை அளவை உயர்த்தி வழங்குமாறு, அரசுக்கு கார்டுதாரர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.

சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் வசிப்போர், தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில் அரிசிக்கு பதில், 10 கிலோ; மற்ற பகுதிகளில் வசிப்போர், 5 கிலோ கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து மாதம், 30 ஆயிரத்து 700 டன் கோதுமை ஒதுக்கப்படுகிறது. பல கடைகளில், அரசு நிர்ணயித்துள்ள அளவில் வழங்கப்படாமல், 3 கிலோ, 2 கிலோ என்று கடை ஊழியர்களின் விருப்பப்படியே கோதுமை வழங்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், சப்பாத்தி சாப்பிடுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கோதுமை பயன்பாடு அதிகரித்து வருகிறது.வெளிச்சந்தையில் கிலோ கோதுமை மாவு பாக்கெட்டின் விலை, 30 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இதற்காக, ஏழை மக்கள் குறிப்பாக, கிராமங்களில் வசிப்போர் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, மாநிலம் முழுதும் ஒரே மாதிரியாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமையின் அளவை உயர்த்தி உத்தரவிடுமாறு, அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X