பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் ஆய்வில் அதிகாரிகள் புதிதாக கடன் வழங்குவதில் பாதிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ஆய்வில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்துவதால், அனைத்து பிரிவுகளிலும், புதிய கடன் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பயிர் கடன், நகை கடன், சிறு வணிக கடன் போன்ற பிரிவுகளில் கடன் வழங்குகின்றன.அ.தி.மு.க., ஆட்சியில், பிப்ரவரி

சென்னை:கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ஆய்வில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்துவதால், அனைத்து பிரிவுகளிலும், புதிய கடன் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பயிர் கடன், நகை கடன், சிறு வணிக கடன் போன்ற பிரிவுகளில் கடன் வழங்குகின்றன.அ.தி.மு.க., ஆட்சியில், பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட, 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடனில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பயிர் கடன் தள்ளுபடி குறித்து, ஒரு மாவட்ட அதிகாரிகள், மற்ற மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் ஆய்வு செய்ய, கூட்டுறவு துறை உத்தரவிட்டது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்ய, தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்காக, நகை கடன் பெற்ற பயனாளிகளின் விபரங்களை ஆய்வு செய்ததில், தள்ளுபடி சலுகையை பெற ஒரே நபர், பல வங்கிகளில் கடன் பெற்றது தெரியவந்தது. இதனால், நகை கடன் ஆய்வையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தொடர்ந்து ஆய்வு பணிகளில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றர்.இதனால், கூட்டுறவு வங்கிகளில், அனைத்து பிரிவுகளிலும் புதிய கடன் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X