ஆட்டோ டிரான்ஸ்பார்மர் மின் வாரியம் கொள்முதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆட்டோ டிரான்ஸ்பார்மர்' மின் வாரியம் கொள்முதல்

Added : அக் 08, 2021
Share
சென்னை:மின் தேவை அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக 2,000 மெகா வாட் மின்சாரம் கையாள, 160 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறன் உடைய, 15 'ஆட்டோ டிரான்ஸ்பார்மர்'களை, மின் வாரியம் வாங்க உள்ளது.அனைத்து வகை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும், பல்வேறு திறனில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்படுகிறது. அங்குள்ள அதிக திறன் உடைய டிரான்ஸ்பார்மரில், மின்சாரத்தின்

சென்னை:மின் தேவை அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக 2,000 மெகா வாட் மின்சாரம் கையாள, 160 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறன் உடைய, 15 'ஆட்டோ டிரான்ஸ்பார்மர்'களை, மின் வாரியம் வாங்க உள்ளது.

அனைத்து வகை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும், பல்வேறு திறனில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்படுகிறது. அங்குள்ள அதிக திறன் உடைய டிரான்ஸ்பார்மரில், மின்சாரத்தின் உயரழுத்தம் குறைக்கப்படுகிறது.பின், மின் வழித்தடங்களில் அனுப்பப்படும் மின்சாரம், மின் சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னை, கோவை போன்ற நகரங்களில், துணை மின் நிலையம் அமைக்க இடம் கிடைப்பதில்லை. அதேசமயம், அந்நகரங்களில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் மின்சாரத்தை எடுத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், ஏற்கனவே உள்ள துணை மின் நிலையங்களில், கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது, 160 எம்.வி.ஏ., திறனில், 15 ஆட்டோ டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட உள்ளன. அவை, மின் தேவை அதிகம் உள்ள இடங்களில் இருக்கும், 230 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலையங்களில் பொருத்தப்படும்.தலா, ஒரு டிரான்ஸ்பார்மரில், 130 மெகா வாட் வரை எடுத்து செல்ல முடியும் என்பதால் கூடுதலாக, 1,950 மெகா வாட் முதல், 2,000 மெகா வாட் மின்சாரம் வரை கையாள முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X