வாகன ஆவண அவகாசம் போக்குவரத்து துறை மவுனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகன ஆவண அவகாசம் போக்குவரத்து துறை மவுனம்

Added : அக் 08, 2021
Share
சென்னை:வாகன ஆவணங்களை அபராதமின்றி புதுப்பிக்க, இந்த மாதம் வரை அவகாசம் வழங்கும்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்திய நிலையில், தமிழக போக்குவரத்து துறை மவுனம் காப்பதால், வாகன உரிமையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.கடந்த, 2020 பிப்., முதல் காலாவதியான ஆவணங்களை, அபராதமின்றி செப்டம்பர் மாதம் வரை புதுப்பிக்க, மத்திய அரசு அவகாசம் அளித்தது. அதை, தமிழக அரசும்

சென்னை:வாகன ஆவணங்களை அபராதமின்றி புதுப்பிக்க, இந்த மாதம் வரை அவகாசம் வழங்கும்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்திய நிலையில், தமிழக போக்குவரத்து துறை மவுனம் காப்பதால், வாகன உரிமையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

கடந்த, 2020 பிப்., முதல் காலாவதியான ஆவணங்களை, அபராதமின்றி செப்டம்பர் மாதம் வரை புதுப்பிக்க, மத்திய அரசு அவகாசம் அளித்தது. அதை, தமிழக அரசும் ஏற்றது.இந்நிலையில், செப்., 30ல்,மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின், மோட்டார் வாகனப் பிரிவு இயக்குனர் பியூஸ் ஜெயின், இம்மாத இறுதி வரை அவகாசத்தை நீட்டிக்கும்படி மாநிலங்களுக்கு பரிந்துரைத்தார்.

ஆனால், இதுவரை, தமிழக போக்குவரத்து துறை சார்பில், எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. இதனால், இணைய வழியில் கட்டணம் செலுத்துவோருக்கு அபராதத் தொகையும் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் உத்தரவு, தமிழகத்துக்கும் பொருந்தும். என்றாலும், அரசு இன்னும் அதற்கான உத்தரவை பிறப்பிக்க வில்லை. அதனால், அபராதம் வசூலிக்கப்படுகிறது. 'உத்தரவு வந்தால், கூடுதலாக செலுத்திய கட்டணம், அடுத்த பரிவர்த்தனையில் சரி செய்யப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X