பொது செய்தி

தமிழ்நாடு

தனி நபருக்கு எவ்வளவு மது விற்கலாம்?

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:'தனி நபருக்கு எவ்வளவு மது வகைகளை விற்கலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என்று 'டாஸ்மாக்' நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து, டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், சென்னை, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உயர்

சென்னை:'தனி நபருக்கு எவ்வளவு மது வகைகளை விற்கலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என்று 'டாஸ்மாக்' நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து, டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், சென்னை, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.இது குறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மது கடைகளை, அரசுக்கு சொந்தமான இடங்களில் திறக்க நடவடிக்கை எடுப்பதுடன், அனுமதியின்றி செயல்படும் பார்களை மூட வேண்டும்.

பல இடங்களில் போலீசார், மொத்தமாக மது விற்பதாக ஊழியர்களை மிரட்டுகின்றனர். தனி நபர் எவ்வளவு மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்று மது விலக்கு துறை தெரிவித்துள்ளது. அதுபோல, தனி நபர்களுக்கு எவ்வளவு மது விற்கலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். மது கடைகளில் வசூலாகும் பணத்தை, கடைகளுக்கு அருகிலுள்ள வங்கி கிளைகளில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என்பது உட்பட, 41 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மேலாண் இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக, நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X