இணை அமைச்சரின் இந்திய பயணம் அமெரிக்க வெளியுறவுத்துறை திருப்தி

Added : அக் 08, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:''அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மேனின் இந்திய பயணம், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதோடு, ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தோ பசிபிக் பிரச்னை உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பாக அமைந்தது,'' என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாய்ப்புஅமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெண்டி
 இணை அமைச்சரின் இந்திய பயணம் அமெரிக்க வெளியுறவுத்துறை திருப்தி

வாஷிங்டன்:''அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மேனின் இந்திய பயணம், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதோடு, ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தோ பசிபிக் பிரச்னை உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பாக அமைந்தது,'' என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வாய்ப்பு



அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மேன் மூன்று நாள் பயணமாக சமீபத்தில் டில்லி வந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார்.இந்த பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறியதாவது:

வெளியுறவுத்துறை இணை அமைச்சரின் இந்த மூன்று நாள் பயணம், அமெரிக்கா - இந்தியா உறவை மேலும் வலுப்படுத்த வாய்ப்பாக அமைந்தது.


ஒத்துழைப்பு

இந்த உறவு இருதரப்புக்கும் பல்வேறு வாய்ப்புகளை அளிக்கிறது. மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்த பேச வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது கொரோனா பரவலை முழுமையாக ஒழிப்பது, பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் அழமான உறவை பேணுவது, 'சைபர்' பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் நிலவும் சர்வதேச அளவிலான பாதுகாப்பு நிலவரம் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X