பொது செய்தி

இந்தியா

சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலையில் சின்ன சேஷ வாகன சேவை நடந்தது.திருமலையில் ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகன சேவை நடந்தது.மகாவிஷ்ணுவிற்கு சேஷன் வஸ்திரமாக, ஆபரணமாக, படுக்கையாக என
 சின்ன சேஷ வாகனத்தில்  மலையப்ப ஸ்வாமி

திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலையில் சின்ன சேஷ வாகன சேவை நடந்தது.

திருமலையில் ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகன சேவை நடந்தது.மகாவிஷ்ணுவிற்கு சேஷன் வஸ்திரமாக, ஆபரணமாக, படுக்கையாக என அனைத்துமாக இருந்து சேவை செய்து வருகிறார்.

அதனால் பிரம்மோற்சவத்தின் போது முதல் இரண்டு வாகன சேவை ஆதி சேஷனுக்காகவும், வாசுகிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன்படி இரண்டாம் நாளான நேற்று காலை, மலையப்ப ஸ்வாமி சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் அன்னப்பறவை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி எழுந்தருளினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X