பொது செய்தி

தமிழ்நாடு

கைரேகை பதிவாகவில்லையா? ரேஷனில் பொருட்கள் உண்டு!

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:'ரேஷன் கடைகளில், ஆதார் இணைப்பு பெற இயலாத சூழல் ஏற்பட்டால், தொழில்நுட்ப சிக்கல் சரியாகும் வரை, இதர வழிமுறைகளின்படி, அத்தியவாசிய பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும்' என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை கருவியில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாற்று திறனாளிகள், முதியவர்கள்,

சென்னை:'ரேஷன் கடைகளில், ஆதார் இணைப்பு பெற இயலாத சூழல் ஏற்பட்டால், தொழில்நுட்ப சிக்கல் சரியாகும் வரை, இதர வழிமுறைகளின்படி, அத்தியவாசிய பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும்' என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை கருவியில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாற்று திறனாளிகள், முதியவர்கள், தங்களின் சார்பில் நியமிக்கப்பட்ட நபர்களை அனுப்பி பொருட்கள் வாங்கலாம்.


முறைகேடு



கைரேகை பதிவின் போது, 'ஆதார்' எண் வாயிலாக, கார்டுக்கு உரியவர் என்பது உறுதி செய்யப்படுகிறது.முதல்முறை கைரேகை பதிவாகவில்லை எனில், சில நிமிடங்கள் காத்திருந்து, இரண்டாவது முறை கைரேகை பதிவு செய்ய வேண்டும்.அப்போதும், கைரேகை பதிவாகவில்லை என்றால், பொருட்கள் வழங்க கருவியின் மென்பொருள் இயக்கம் அனுமதிக்கும். இந்த வசதியை பயன்படுத்தி, பல ஊழியர்கள், வாங்காத கார்டுதாரர்களின் பொருட்களை விற்றது போல பதிவு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதனால், இந்த முறையில் பொருட்கள் வழங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

தற்போது, கைரேகை பதிவில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால், கார்டுதாரர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், உணவு வழங்கல் துறை ஆணையர், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:

ரேஷன் கடைக்கு வரும் மக்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு, விரல் ரேகை தேய்மானம் அல்லது விற்பனை இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட காரணங்களை கூறி, பொருட்கள் வழங்க மறுக்கக் கூடாது. விரல் ரேகை பதிவு சரியாக உள்ள கார்டுதாரர்களுக்கு, பொருள் உடனே வழங்கப்படுகிறது.


இதர வழிமுறைகள்



ரேகை தெளிவின்மை காரணமாக, பதிவு தோல்வி அடையும் பட்சத்தில், அடுத்தகட்டமாக எவ்வித தடையுமின்றி உடனே வினியோகம் மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப காரணங்களால், வயது குறைந்தவர்கள் கூட, ஆதார் இணைப்பு பெற இயலாத சூழல் சில நேரங்களில் ஏற்படுகிறது.இதனால், பல கார்டுதாரர்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்க நேரிடுகிறது. அரை மணி நேரம் வரை காத்திருந்தும், இணையதள இணைப்பு பெற இயலாத சூழல் ஏற்பட்டால், தொழில்நுட்ப சிக்கல் சரியாகும் வரை, இதர வழிமுறைகளின்படி பொருட்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X