பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை வாய்ப்பில் பணியாற்றுபவர்களை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு பணியாற்ற கூறி மிரட்டிய திமுக வினரால் பரபரப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது ஏமூர் கிராமம், தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, இந்த ஊராட்சியில் மாவட்ட 8 வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில்ஏமூர் ஊராட்சிக்குட்பட்ட, ஏமூர் புதூர் அருகே உள்ள குன்னனூர் வடக்கு சுண்ணாம்பு பாறையின் அருகே இந்த
 100 நாள் வேலை வாய்ப்பில் பணியாற்றுபவர்களை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு பணியாற்ற கூறி மிரட்டிய திமுக வினரால் பரபரப்பு

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது ஏமூர் கிராமம், தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, இந்த ஊராட்சியில் மாவட்ட 8 வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில்ஏமூர் ஊராட்சிக்குட்பட்ட, ஏமூர் புதூர் அருகே உள்ள குன்னனூர் வடக்கு சுண்ணாம்பு பாறையின் அருகே இந்த பஞ்சாயத்திற்குட்பட்ட மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலையோரம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை 11.00 மணியளவில் தாந்தோன்றி வட்டாரவளர்ச்சி அலுவலர் அனைத்து 100 நாள் பணியாளர்களையும் திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்புமாறும், மாவட்ட ஆட்சியர் சொல்லி இருப்பதாக கூறி இப்பகுதி பணியாளர்களை திமுக வினர் மிரட்டி அழைத்துள்ளனர். இந்நிலையில் எங்கள் பணி தேர்தலில் பணியாற்றுவது அல்ல எனக்கூறி தட்டிக் கழித்துள்ளதாக தெரிகின்றது.

இந்நிலையில் இன்று திமுக நிர்வாகி ரமேஷ் என்பவர் இன்று காலையில், நேற்று திமுக தேர்தல் பணிக்காகவும், பிரச்சாரத்திற்கு யாரும் வரவில்லை, ஆகவே இந்த 100 நாள் பணியின் பணி தள பொறுப்பாளர்தாமரைச்செல்வி என்பவரிடம் இனி யாரும் வேலை செய்ய வேண்டாம், இது தான் கலெக்டர் ஆர்டர், எங்கள் ஆர்டர் என்று கூறி 100 நாள் பணியாளர்களையும் மிரட்டி சென்றுள்ளனர்.

ஏமூர் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் என்பவரிடம் இது போல திமுக வினர் எங்களை திமுக விற்கு வாக்குகள் சேகரிக்க அழைத்தனர். அதை நாங்கள் மறுக்க, கலெக்டர் உங்களுக்கு 100 நாள் வேலை இல்லை என்று வயதான பெண்மனிகள் என்றும் பாராமல் மிரட்டி சென்ற சம்பவத்தினை கூற, தாந்தோன்றி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம், ஏமூர் ஊராட்சி தலைவர் முறையிட்டுள்ளார். பின்னர் அது எல்லாம் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறி சமரசம் செய்து வைத்து சென்றுள்ளார்.

ஒரு இடைத்தேர்தல் அதுவும் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமென்றால் மக்கள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்.மாவட்ட கலெக்டர் பெயரை கூறியும், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதலுடன் திமுக விற்கு வாக்கு சேகரிக்க திமுக பிரமுகர்கள் கொலைமிரட்டல் விடுத்ததோடு, தேர்தல் பணியாற்ற வரவில்லை என்றால் வேலை இல்லை எனக்கூறி அராஜக செயலில் ஈடுபடும் திமுக வினர் மீதும் மாவட்ட நிர்வாகம் மீதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்துவாரா ? தேர்தல் நடுநிலையுடன் நடக்குமா ? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X