எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பால்கனி பாதுகாப்பு விதிகளை கட்டாயமாக்க கோரிக்கை

Updated : அக் 09, 2021 | Added : அக் 08, 2021
Share
Advertisement
'அடுக்குமாடி கட்டடங்களில், பால்கனி தொடர்பான பாதுகாப்பு விதிகளை கட்டாயமாக்க வேண்டும்' என்று கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் அடுக்குமாடி கட்டடங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சென்னையில், 14 மாடிகளுடன் கட்டப்பட்ட, எல்.ஐ.சி., கட்டடமே, மிக உயரமான கட்டடமாக இருந்து வந்தது.ஆனால், 2008ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், 19 மாடி, 25 மாடி,
 பால்கனி பாதுகாப்பு விதிகளை கட்டாயமாக்க கோரிக்கை

'அடுக்குமாடி கட்டடங்களில், பால்கனி தொடர்பான பாதுகாப்பு விதிகளை கட்டாயமாக்க வேண்டும்' என்று கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் அடுக்குமாடி கட்டடங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சென்னையில், 14 மாடிகளுடன் கட்டப்பட்ட, எல்.ஐ.சி., கட்டடமே, மிக உயரமான கட்டடமாக இருந்து வந்தது.ஆனால், 2008ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், 19 மாடி, 25 மாடி, 45 மாடி கட்டடங்கள் வர துவங்கிஉள்ளன.இதில் ஆரம்பத்தில், அலுவலக பயன்பாட்டுக்கான கட்டடங்கள் வந்த நிலையில், தற்போது, குடியிருப்புகள் வருகின்றன.

பழைய மாமல்லபுரம் சாலை, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், 19 முதல், 30 மாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படுகின்றன.


பிரச்னை என்ன?


இதுபோன்ற கட்டடங்களில் வீடு வாங்குவோர், மாடம் எனப்படும் பால்கனி அவசியம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இத்தகைய கட்டடங்களை வடிவமைக்கும் போதே, பால்கனி இருப்பது உறுதி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம், 10 முதல் 15 சதுர அடி பரப்பளவுக்கு பால்கனி அமைக்கப்படுகிறது. ஆனால், இதில் தடுப்பு சுவர்கள் அமைப்பதில் பலரும் அலட்சியம் காட்டுவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

வீட்டுக்குள் தரையில் விளையாடும் குழந்தைகள், இந்த பால்கனிக்கு சென்றால் விபத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. மேலும் துணி உலர்த்த செல்வோர், காற்றோட்டமாக மொபைல் போன் பேசுபவர்கள் விபத்துக்கு உள்ளாவதும் உண்டு.


சுவரில் அலட்சியம்

கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:அடுக்குமாடி கட்டடங்களில் பால்கனி அமைக்கும் போது, அதில் தடுப்பு சுவர் அமைப்பது தொடர்பாக, எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதனால், பெரும்பாலானோர், இரண்டரை அடி உயரத்துக்கு தான் தடுப்பு சுவர் அமைக்கின்றனர்.சராசரி உயரம் உள்ளவர்கள், இந்த தடுப்பு சுவரை ஒட்டி நின்றால், தடுமாறி விழும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே, நான்கு அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். அதன் மேல் காலியாக உள்ள பகுதிக்கும் திறந்து மூடும் வசதியுடன், 'கிரில்' கதவுகள் அமைப்பது நல்லது. பல இடங்களில் பால்கனிக்கு வெளியில் கம்பிகள் அமைத்து, துணி உலர்த்த மக்கள் முயற்சிக்கின்றனர்.
குறைந்த உயர தடுப்பு சுவர் உள்ள பால்கனியில், இந்த முயற்சி விபத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. எனவே, பால்கனி பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


கட்டுப்பாடு அவசியம்



இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில செயலர் எஸ்.ராமபிரபு கூறியதாவது:தமிழக அரசின் பொது கட்டட விதிகளிலும், தேசிய கட்டட விதிமுறைகளிலும் பால்கனிக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இடம்பெறவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.பால்கனிகளில், நான்கு அடி உயர தடுப்பு சுவரை கட்டாயமாக்க வேண்டும். பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில், பால்கனியில் பாதுகாப்பு காரணங்களுக்காக கூட, தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்த கூடாது என்று, நிபந்தனை விதிக்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனங்கள், வீட்டு உரிமையாளர் சங்கங்கள், இது தொடர்பான நிபந்தனைகளை விதிக்கின்றன. கட்டட வடிவமைப்பு நிலையிலேயே பால்கனி பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும்.இதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X