சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொங்கும் பாறைகள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், பல இடங்களில் ராட்சத பாறைகள் விழும் நிலையில் தொங்குவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், மழை நீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் பணிகளை துவக்கியுள்ளனர். மரப்பாலம், ஈச்சமரம்
 தொங்கும் பாறைகள்

குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், பல இடங்களில் ராட்சத பாறைகள் விழும் நிலையில் தொங்குவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், மழை நீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் பணிகளை துவக்கியுள்ளனர். மரப்பாலம், ஈச்சமரம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், சாலையோரத்தில் விழுந்த ராட்சத பாறைகள் அகற்றப்படவில்லை.

பல இடங்களில் பாறைகள் அந்தரத்தில் தொங்குகின்றன. பருவ மழை தீவிரமடைந்தால், வாகனங்கள் செல்லும்போது பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளது. அபாயத்தில் தொங்கும் பாறைகளை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X