பொது செய்தி

தமிழ்நாடு

திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை தோட்டக்கலை துறையினர் காத்திருப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்படாததால், தோட்டக்கலை துறையினர் காத்திருக்கின்றனர்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதேபோல, மானிய

சென்னை:சட்டசபையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்படாததால், தோட்டக்கலை துறையினர் காத்திருக்கின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல, மானிய கோரிக்கை தாக்கலின்போதும், பல்வேறு புதிய திட்டங்களை, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த, 50 சிறப்பு அங்காடிகள் அமைத்தல், தோட்டக்கலை பணிகளை எளிதாக்கும் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள், இதில் அடக்கம்.

பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை தாக்கலின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை, 2022 மார்ச்சிற்குள் முடிக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திட்டங்களின் நிலையை அவ்வப்போது ஆய்வு செய்வதற்காக, தலைமை செயலகத்தில் உள்ள தன் அறையில், ஆன்லைனில் புதிய தொழிற்நுட்ப வசதியை ஏற்படுத்தி கண்காணித்து வருகிறார்.

பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை தாக்கல் செய்து ஒரு மாதம் கடந்த நிலையில், தோட்டக் கலை துறைக்கு அறிவித்த எந்த ஒரு திட்டத்திற்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க முடியுமா என்ற கவலையில், தோட்டக்கலை துறையினர் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X