உடுமலை சைனிக் பள்ளியில் முதல் முறையாக மாணவியர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலை சைனிக் பள்ளியில் முதல் முறையாக மாணவியர்

Added : அக் 08, 2021
Share
உடுமலை:உடுமலை சைனிக் பள்ளியில், முதல் முறையாக நடப்பு கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் துவங்கின.ராணுவ அமைச்சகத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி செயல்படுகிறது. பள்ளி துவங்கிய, 1962ம் ஆண்டு முதல் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். நடப்பு கல்வியாண்டில், முதல் முறையாக, ஆறாம் வகுப்பில் 12 மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 உடுமலை சைனிக் பள்ளியில் முதல் முறையாக  மாணவியர்

உடுமலை:உடுமலை சைனிக் பள்ளியில், முதல் முறையாக நடப்பு கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் துவங்கின.

ராணுவ அமைச்சகத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி செயல்படுகிறது. பள்ளி துவங்கிய, 1962ம் ஆண்டு முதல் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். நடப்பு கல்வியாண்டில், முதல் முறையாக, ஆறாம் வகுப்பில் 12 மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கிய நிலையில், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவியர், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்தனர். 'ராணி வேலு நாச்சியார்' என்ற பெயரில் மாணவியர் தங்கும் விடுதியும் பயன்பாட்டுக்கு வந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X