சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா மாறுதல் பணிகள் தாலுகாக்களில் ஸ்தம்பிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாநில அளவில், 197 வரைவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பட்டா பெயர் மாறுதல் பணி ஸ்தம்பித்துள்ளது.தமிழக அரசு 1989ம் ஆண்டு, தாலுகா அலுவலகம் தோறும், ஒரு நில ஆவண வரைவாளர் மற்றும் முதுநிலை வரைவாளர் பணியிடத்தை உருவாக்கியது. 30 ஆண்டுகளாக, நில அளவை பணி பல மடங்கு அதிகரித்த பிறகும், தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவே இல்லை.

திருப்பூர்:மாநில அளவில், 197 வரைவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பட்டா பெயர் மாறுதல் பணி ஸ்தம்பித்துள்ளது.

தமிழக அரசு 1989ம் ஆண்டு, தாலுகா அலுவலகம் தோறும், ஒரு நில ஆவண வரைவாளர் மற்றும் முதுநிலை வரைவாளர் பணியிடத்தை உருவாக்கியது. 30 ஆண்டுகளாக, நில அளவை பணி பல மடங்கு அதிகரித்த பிறகும், தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவே இல்லை. 'ஆன்லைன்' பட்டா மாறுதலுக்கு, தாலுகா தோறும் சராசரியாக, 300க்கும் அதிகமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. வருவாய் கணக்குகளில் மாறுதல் செய்ய, வரைவாளர்கள் இரவு, பகலாக பணியாற்ற வேண்டி உள்ளது. இதன் காரணமாக, நில அளவை தொடர்பான பணிகள் தாமதம் ஆகின்றன.

தமிழ்நாடு நில அளவு வரைவாளர் ஒன்றிய தலைவர் முத்துராஜா கூறுகையில், ''தமிழகத்தில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 218 பட்டா மாறுதல் மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. விரைந்து முடிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.''ஒரு வரைவாளர், 50 விண்ணப்பங்களை கவனிக்க வேண்டி உள்ளது.

பட்டா மாறுதல் உத்தரவு வழங்க, போதிய வரைவாளர்கள் பணியில் இல்லை. மாநில அளவில் 312 தாலுகாக்களில், 197ல் வரைவாளர் பணியிடம் காலியாக உள்ளது. போர்க்கால அடிப்படையில், காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X