பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் டீசல் வாக்குறுதி உடனே நிறைவேற்ற கோரிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
சேலம்:'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு அறிவிப்பை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சேலத்தில் நடந்தது. பின், தலைவர் குமாரசாமி, பொருளாளர் தனராஜ் அளித்த பேட்டி:அக்., 15 முதல் ஏற்று, இறக்கு கூலியை சரக்கு

சேலம்:'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு அறிவிப்பை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சேலத்தில் நடந்தது. பின், தலைவர் குமாரசாமி, பொருளாளர் தனராஜ் அளித்த பேட்டி:அக்., 15 முதல் ஏற்று, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளர்களே வழங்க வேண்டும். அதை லாரி உரிமையாளர்களால் வழங்க இயலாது என முடிவு செய்து அமல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு, வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு அறிவிப்புகளை கடைசி நேரத்தில் வழங்குவதை தவிர்த்து, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஒளிரும் பட்டையை பொருத்த 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி, செப்., 6ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதித்த, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள், அதன் பின், இரண்டு நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டுமே ஒட்ட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். எனவே, மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த மறுக்கும் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

லாரி உரிமையாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம், அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த டீசல் லிட்டருக்கு, 4 ரூபாய் குறைப்பு அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X