சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதுக்கல் அதிகரிப்பால் உரத்திற்கு தட்டுப்பாடு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:அதிக விலைக்கு விற்பதற்காக, தனியார் கடைகளில் உர வகைகள் அதிகம் பதுக்கப்பட்டுள்ளதே, செயற்கை தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடியானது, இலக்கை தாண்டி நடந்துள்ளது. தற்போது, சம்பா பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், யூரியா, டி.ஏ.பி., - பொட்டாசியம், கூட்டு உரங்கள்

சென்னை:அதிக விலைக்கு விற்பதற்காக, தனியார் கடைகளில் உர வகைகள் அதிகம் பதுக்கப்பட்டுள்ளதே, செயற்கை தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடியானது, இலக்கை தாண்டி நடந்துள்ளது. தற்போது, சம்பா பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், யூரியா, டி.ஏ.பி., - பொட்டாசியம், கூட்டு உரங்கள் உள்ளிட்டவற்றிற்கு, மாநிலம் முழுதும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில், வேளாண் துறையினர் போதுமான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக கூறி வருகின்றனர்.

இதனால், என்ன நடக்கிறது என தெரியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர். அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உர தட்டுப்பாடு குறித்து, அரசிற்கு கேள்வி எழுப்பி வருகின்றன. சம்பா சாகுபடி உச்ச கட்டத்தை அடையும் போது உரத்தின் தேவை அதிகரிக்கும். அத்தகைய நேரத்தில், கூடுதல் விலைக்கு விற்பதற்காக, தனியார் கடைகளில் உர வகைகள் பதுக்கப்பட்டு வருகின்றன.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உள்ள அலுவலர்களும், இத்தகைய செயல்களில் இறங்கி, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.எனவே, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது போல, உர விற்பனை மற்றும் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். பதுக்கலில் ஈடுபட்டுள்ள தனியார் கடைகளின், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உர தட்டுப்பாட்டை குறைக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X