சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாண்டில் வளைவு அமைக்க கோரி சாலை மறியல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மரக்காணம்:கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடியில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க, துாண்டில் முள் வளைவு அமைக்கக் கோரி, மீனவ கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடியில் 350க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் ஆரோவில் பீச், பொம்மையார்பாளையம் பகுதிகளில் கடல் அரிப்பைத்
 துாண்டில் வளைவு அமைக்க கோரி சாலை மறியல்

மரக்காணம்:கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடியில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க, துாண்டில் முள் வளைவு அமைக்கக் கோரி, மீனவ கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடியில் 350க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் ஆரோவில் பீச், பொம்மையார்பாளையம் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கற்கள் கொட்டி, துாண்டில் முள் வளைவு அமைத்தனர்.இதனால், பக்கத்து கிராமமான பிள்ளைச்சாவடி கடற்கரையில் கடல் நீர் மேல் நோக்கி வந்தபடி உள்ளது.
சில தினங்களாக கன மழையால், கடல் சீற்றம் ஏற்பட்டு கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது.நேற்று முன்தினம் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு, பிள்ளைச்சாவடி மீனவ குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்தது. இதில், இரண்டு படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. மீனவர்கள் படகுகளை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். கடல் நீர் உட்புகுந்ததால் நான்கு வீடுகள் சேதமடைந்தன.

ஆத்திரமடைந்த கிராம மக்கள், பிள்ளைச்சாவடி கடல் பகுதியிலும் கருகற்களைக் கொட்டி துாண்டில் முள் வளைவு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி, புதுச்சேரி - சென்னை இ.சி.ஆர்., சாலை, பிள்ளைச்சாவடி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அருண், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சு நடத்தினர். அரசிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X