சிவசங்கர் பாபா காவல் நீட்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா காவல் நீட்டிப்பு

Added : அக் 08, 2021
Share
செங்கல்பட்டு:பெண்களை மானபங்கம் படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிற்கு, 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று மாணவியர் புகார்
 சிவசங்கர் பாபா காவல் நீட்டிப்பு

செங்கல்பட்டு:பெண்களை மானபங்கம் படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிற்கு, 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று மாணவியர் புகார் அளித்தனர். காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'போக்சோ' உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ், மூன்று வழக்குகள் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும், பள்ளியில் பெண்களை மானபங்கம் படுத்தியதாக, தனியாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.புழல் சிறையில் அடைக்கப் பட்ட சிவசங்கர் பாபாவை, காவல் நீட்டிப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்; நீதிபதி ரீனா முன் அவரை ஆஜர்படுத்தனர்.விசாரித்த நீதிபதி, வரும் 22ம் தேதி வரை, சிவசங்கர் பாபாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X