அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரியை சுத்தப்படுத்த அன்புமணி வலியுறுத்தல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:'காவிரி ஆற்றை துாய்மைப்படுத்த சிறப்பு திட்டம் வகுத்து, அரசு செயல்படுத்த வேண்டும்' என்று பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:காவிரி ஆற்றில் மருத்துவம் சார்ந்த மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் மிக அதிக அளவில் கலந்துள்ளன என்று சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.காவிரி ஆற்றில் கலந்திருக்கும் மருந்து மற்றும்

சென்னை:'காவிரி ஆற்றை துாய்மைப்படுத்த சிறப்பு திட்டம் வகுத்து, அரசு செயல்படுத்த வேண்டும்' என்று பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:காவிரி ஆற்றில் மருத்துவம் சார்ந்த மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் மிக அதிக அளவில் கலந்துள்ளன என்று சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.காவிரி ஆற்றில் கலந்திருக்கும் மருந்து மற்றும் உலோக மாசுக்களால், நீர் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

காவிரி கரையோரப் பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. சாயப்பட்டறைகள், துணி நிறுவனங்கள், வேதிப்பொருள் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றின் கழிவுப் பொருட்கள் முறையாக சுத்திகரிக்கப்படாமல், வெளியேற்றப்படுவது தான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம்.

காவிரி ஆற்றை துாய்மைப்படுத்தவும், தொழிற்சாலை கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப் படுவதை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் வகுத்து, அரசு செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X