அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீமான் சூப்பர்மேனா: காங்.,அழகிரி கேள்வி

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:''சீமான் எல்லாவற்றையும் கடந்த சூப்பர்மேனா,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி எழுப்பினார். கோவையில்அவர் அளித்த பேட்டி:நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகிறார். பெண்களை பற்றி விமர்சிக்கும்போது, 'சக்களத்தி' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். வரம்பு மீறி கீழ்த்தரமான வார்த்தையை பிரயோகிப்பதும், வன்முறையை துாண்டுவதும்
 சீமான் சூப்பர்மேனா: காங்.,அழகிரி கேள்வி

கோவை:''சீமான் எல்லாவற்றையும் கடந்த சூப்பர்மேனா,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி எழுப்பினார்.

கோவையில்அவர் அளித்த பேட்டி:நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வருகிறார். பெண்களை பற்றி விமர்சிக்கும்போது, 'சக்களத்தி' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். வரம்பு மீறி கீழ்த்தரமான வார்த்தையை பிரயோகிப்பதும், வன்முறையை துாண்டுவதும் தவறு.அவர் மீது, டி.ஜி.பி.,யிடம் காங்., சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாட்களுக்குள் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல் ரீதியாக யாரையும் விமர்சிக்கலாம். தவறான வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது.அப்படி பேசும் உரிமையை சீமானுக்கு யார் கொடுத்தது? நீங்கள் என்ன எல்லாவற்றையும் கடந்த சூப்பர்மேனா? சீமான் தரக்குறைவாக பேசுவதை அரசு தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த காங்., - எம்.பி., உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், ''உ.பி.,யில் விவசாயிகளை மிரட்டிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X