அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் மீது தாக்குதல் தீர்வு காண வேண்டுகோள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:'இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு உடனே இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டும்' என்று த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி, கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர்

சென்னை:'இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு உடனே இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டும்' என்று த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி, கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால், தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாக நீடிக்கிறது.

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு உடனே இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு பேசி, தீர்வு காண வேண்டும். தமிழக அரசும், மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படை அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X