யோகாவால் மறுவாழ்வு: அமைச்சர் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யோகாவால் மறுவாழ்வு: அமைச்சர் பெருமிதம்

Added : அக் 08, 2021
Share
சென்னை:''விபத்தில் ஆறு துண்டுகளாக கால் உடைந்த நிலையில், யோகா பயிற்சி வாயிலாக, மறுவாழ்வு பெற்று, மீண்டும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க துவங்கினேன்,'' என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னையில், 'டிரீம் ரன்னர்ஸ்' மாரத்தான் போட்டி, 1ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடந்து வருகிறது. இந்த போட்டி வாயிலாக கிடைக்கும் நிதி, கால் இல்லாதவர்களுக்கு,
 யோகாவால் மறுவாழ்வு: அமைச்சர் பெருமிதம்

சென்னை:''விபத்தில் ஆறு துண்டுகளாக கால் உடைந்த நிலையில், யோகா பயிற்சி வாயிலாக, மறுவாழ்வு பெற்று, மீண்டும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க துவங்கினேன்,'' என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில், 'டிரீம் ரன்னர்ஸ்' மாரத்தான் போட்டி, 1ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடந்து வருகிறது. இந்த போட்டி வாயிலாக கிடைக்கும் நிதி, கால் இல்லாதவர்களுக்கு, செயற்கை கால் பொருத்த பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த போட்டியில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் துவங்கி, சாந்தோம், மெரினா கடற்கரை வரை என 21.1 கி.மீ., துாரத்தை 2:20 மணி நேரத்தில் ஓடி நிறைவு செய்துள்ளார்.பின், அவர் அளித்த பேட்டி:

இதுவரை 131 மாரத்தான் போட்டிகளில் ஓடியுள்ளேன். இடையில் 2004 விபத்தில் சிக்கி, வலது கால் ஆறு துண்டுகளாக உடைந்தது. இனி, வாழ்நாள் முழுதும் ஓட முடியாது என்றும், சம்மணமிட்டு உட்கார முடியாது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், யோகா பயிற்சி வாயிலாக சம்மணமிட்டு உட்கார்ந்து பத்மாசனம் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

அதன்பின், 2014ல் இருந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்று, மீண்டும் ஓட துவங்கினேன். இதுவரை, ஆசிய சாதனை போன்ற பல சாதனைகளை படைத்திருக்கிறேன். என்னை பின்பற்றி பலர் முயற்சி செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X