அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்துக்கு வாடகை செலுத்த 'ஆன்-லைன்' வசதி

Added : அக் 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:கோவில் இடங்களுக்கான குத்தகை மற்றும் வாடகையை, 'ஆன்-லைன்' வழியாக செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்து 287 கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம்; 22 ஆயிரத்து 600 கட்டடங்கள்; 33 ஆயிரத்து 665 காலிமனைகள் உள்ளடக்கிய 3.56 லட்சம் சொத்துக்கள் உள்ளன.இவற்றின் வாடகைதாரர்கள், 'ஆன்-லைன்' வாயிலாக குத்தகை,
 கோவில் சொத்துக்கு வாடகை செலுத்த 'ஆன்-லைன்' வசதி

சென்னை:கோவில் இடங்களுக்கான குத்தகை மற்றும் வாடகையை, 'ஆன்-லைன்' வழியாக செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்து 287 கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம்; 22 ஆயிரத்து 600 கட்டடங்கள்; 33 ஆயிரத்து 665 காலிமனைகள் உள்ளடக்கிய 3.56 லட்சம் சொத்துக்கள் உள்ளன.இவற்றின் வாடகைதாரர்கள், 'ஆன்-லைன்' வாயிலாக குத்தகை, வாடகை செலுத்தும் வசதியை, துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன், மயிலை கபாலீஸ்வரர் கோவில் இணை கமிஷனர் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், அமைச்சர் அளித்த பேட்டி:கோவில் சொத்துக்களை ஏலம், ஒப்பந்தம் வாயிலாக வாடகை, குத்தகைக்கு விடுவது குறித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வாடகைதாரர்களின் விபரங்கள் பெறப்பட்டு, நிலுவை தொகை, பதிவேட்டில் பதியப்பட்டு வருகிறது.

கோவில் நிலங்கள், கட்டடங்களின் வாடகையை முறையாக வசூல் செய்ய, ஆன்-லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. வாடகை, குத்தகை செலுத்த, மாதந்தோறும் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நியாய வாடகை நிர்ணய குழு விரைவில் அமைக்கப்படும்.தொழில்நுட்ப வசதி இல்லாத வாடகைதாரர்கள், கோவில் அலுவலகத்தில் வாடகை செலுத்தி அதற்கான ரசீதை பெறலாம்.

இந்த திட்டம் வாயிலாக, முறையாக வாடகை செலுத்தாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.சென்னையில், 'குயின்ஸ் லாண்ட்' கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலம், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மீட்கப்படும். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - chennai,இந்தியா
09-அக்-202121:37:44 IST Report Abuse
Rajan தி மு க காரணை நம்ப முடியாது....
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
09-அக்-202120:02:43 IST Report Abuse
P Ravindran கண் துடைப்பு வெள்ளை. பின்புறத்தில் ஏதோ நடக்கிறது.
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
09-அக்-202120:01:22 IST Report Abuse
P Ravindran வருடத்திற்கு நூறு ரூபாய் செலுத்த எதற்கு ஆன்லைன். பிற மதத்தினர் கோவில் நிலத்தை குத்தகை எடுத்துஇருந்தால் அதை முதலில் நிறுத்துங்கள்.பிற மதத்தினருக்கு கோவில் நிலத்தை ஏன் குத்தகைக்கு / வாடகைக்கு கொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X