சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'மடியில் கனம் இல்லை என்றால்...'

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021
Share
Advertisement
'மடியில் கனம் இல்லை என்றால்...'கரூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவது நீடித்தால், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் அனுமதி பெற்று, கரூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்'
பக்க வாத்தியம்


'மடியில் கனம் இல்லை என்றால்...'



கரூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவது நீடித்தால், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் அனுமதி பெற்று, கரூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'எதுவானாலும், நீதிமன்ற விசாரணையில் உண்மை தெரிய போகுது... அது சரி, மடியில் கனம் இல்லைன்னா, வழியில் பயம் எதுக்கு பா...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


வெளிச்சம் முக்கியம்!



சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாள் விழா, சமீபத்தில் கொண்டாடப்பட்டது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள குமரன் நினைவகத்தில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அமைச்சர்கள், ரோஜா மாலையுடன் சென்ற போது, சிலை இருந்த வளாகத்தில், 'ஜீரோவாட்ஸ் பல்பு' மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கோபமான அமைச்சர் சாமிநாதன், 'எல்லா பல்புக்களையும் 'ஆன்' பண்ணுங்க...' என கடிந்து கொண்டார். இதையடுத்து, ஊழியர்கள் ஓடிச்சென்று அனைத்து பல்புகளையும், 'ஆன்' செய்தனர். அதன் பின், சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கிருந்த தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அமைச்சர் வர்றப்ப மட்டும் தான், தியாகிக்கே வெளிச்சம் கிடைக்குது...'' என்றார். அருகிலிருந்தவர், 'தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... மாலை போடுறது யாருன்னு மக்களுக்கு தெரியணுமுன்னு தான், அவர் வெளிச்சம் காட்ட சொன்னாரு...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'இப்போ 'ஐபேக்' இல்லையே!'



சேலம் மாவட்டம் ஆத்துாரில், தனியாருக்கு சொந்தமான நவீன சேகோ ஆலையில், மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழில்துறை உள்ளிட்ட திட்ட விபரங்களை முதலாவதாக பேசினார்.அதன்பின், விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் நான்கு பேர் மட்டும் பேச அனுமதித்தனர். அவர்கள் தெரிவித்த புகார்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் சென்றார்.
அங்கிருந்த விவசாயி ஒருவர், 'இக்கூட்டத்தில் பேச வேண்டியதை, முன் கூட்டியே எழுதி கொடுத்துட்டாங்க போல... அதனால் தான் நம் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முதல்வர் கிளம்பிட்டார்...' என்றார்.அருகிலிருந்தவர், 'இப்போ, 'ஐபேக்' இல்லையே...' என்றதும், சுற்றி இருந்தோர் சிரித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X