சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஜெயில் பறவை?

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021
Share
Advertisement
ஜெயில் பறவை?'ஏற்கனவே கட்சி மேலிடத்திடம் கெட்ட பெயர்; இப்போது சட்ட சிக்கல் வேறா; பாவம்யா அந்த மனிதர்' என, பா.ஜ., பொதுச் செயலர் விஜய வர்கியா பற்றி கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விஜய வர்கியா, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு, கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்காக
அக்கம் பக்கம்


ஜெயில் பறவை?



'ஏற்கனவே கட்சி மேலிடத்திடம் கெட்ட பெயர்; இப்போது சட்ட சிக்கல் வேறா; பாவம்யா அந்த மனிதர்' என, பா.ஜ., பொதுச் செயலர் விஜய வர்கியா பற்றி கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விஜய வர்கியா, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு, கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்காக பல மாதங்களாக அங்கு முகாமிட்டு, தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார். டில்லியிலிருந்து வரும் மேலிட தலைவர்கள் எந்த இடத்தில் பிரசாரம் செய்ய வேண்டும், தேர்தல் வியூகம் என்ன என்பது குறித்தெல்லாம் திட்டமிடும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது.
இதனால் மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணமுல் காங்கிரசின் கடும் கோபத்துக்கு ஆளானார். ஜாமினில் வெளிவர முடியாத பல வழக்குள் இவர் மீது பதிவு செய்யப்பட்டன. இவ்வளவு சிரமப்பட்டும் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறவில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதனால் பா.ஜ., மேலிடத்தின் கோபப் பார்வைக்கு ஆளானார் விஜய வர்கியா. இப்போது, மத்திய
பிரதேசத்தை விட்டு எங்கும் வெளியேறுவது இல்லை. மேற்கு வங்கத்துக்கு வந்தால், அவரை கைது செய்வதற்கு அம்மாநில போலீசார் தயாராக உள்ளனர். 'விஜய வர்கியா மேற்கு வங்கத்தில் காலடி எடுத்து வைத்தால் ஜெயில் பறவை தான்' என, கிண்டலடிக்கின்றனர், திரிணமுல் கட்சியினர்.


குடும்பத்தில் குழப்பம்!



'எப்படியாவது முதல்வர் பதவியிலிருந்து என்னை நீக்கி விடலாம் என சதித் திட்டம் தீட்டுகின்றனர்; அது நடக்காது' என பொறுமுகிறார், ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்.
முன்னாள் முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ரகுபர் தாஸ் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், 'ஹேமந்த் சோரன், அவரது குடும்பத்தினரை ஏமாற்றுகிறார். அவரது அண்ணி சீதா சோரன், சகோதரர் வசந்த் சோரன் ஆகியோரை ஓரம் கட்டுகிறார். அவர்களுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்' என, தெரிவித்திருந்தார்.
ரகுபர் தாசின் இந்த அறிவிப்பு, ஹேமந்த் சோரன் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மகன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை நிறுவியவர் தான் சிபு சோரன். தற்போது, தீவிர அரசியலில் இவர் இல்லை.
ஆனால் அவரது மூத்த மகனும், உடல் நலக்குறைவால் காலமானவருமான துர்கா சோரனின் மனைவி சீதா, இளைய மகன் வசந்த் சோரன் ஆகியோர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
'இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு முதல்வர் பதவியை கொடுக்காமல், தானே அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அவர்களை ஏமாற்றுகிறார்' என்பது தான், ஹேமந்த் சோரன் மீது, ரகுபர் தான் வீசிய அணுகுண்டு.
இது, சிபு சோரன் குடும்பத்தினரிடையே நன்றாகவே வேலை செய்கிறது. 'குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார் ரகுபர் தாஸ்' என, புலம்புகிறார் ஹேமந்த் சோரன்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X