சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை: 'கடவுள் இல்லை; கடவுளை கும்பிடுபவர்கள் முட்டாள்' என்பது தான் தி.மு.க.,வின் சித்தாந்தம். அதை மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகுத்த முற்படுகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கும் தடை போட்டனர். தற்போது, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோவில்களை மூடுகின்றனர். இதன் மூலம், அவர்களின் கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை புகுத்த முயற்சிக்கின்றனர்.'டவுட்'
'டவுட்' தனபாலு

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை: 'கடவுள் இல்லை; கடவுளை கும்பிடுபவர்கள் முட்டாள்' என்பது தான் தி.மு.க.,வின் சித்தாந்தம். அதை மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகுத்த முற்படுகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கும் தடை போட்டனர். தற்போது, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோவில்களை மூடுகின்றனர். இதன் மூலம், அவர்களின் கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை புகுத்த முயற்சிக்கின்றனர்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும் நபர்கள், கரடியாக கத்தினாலும், வாய் கிழிய பேசினாலும், ஹிந்துக்களின் பக்தியையும், மத உணர்வையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஹிந்து எதிர்ப்பாளர்கள் கூட்டத்திற்கும் செல்லும் ஹிந்துக்கள், அடுத்த நாளே, அய்யப்பன் கோவிலுக்கும் மாலை போட்டு செல்வது நாம் அறிந்தது தான். எனவே, இவர்களின் சதித்திட்டம் எப்போதும் வெற்றி அடையாது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!


ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
: உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., வெளிப்படையாகவே கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்கிறார். அவர், ஹிந்து என சான்றிதழ் வைத்துள்ளார். இது ஒரு கிரிமினல் குற்றம்; மிகப் பெரும் மோசடி. அரசு துறையில், ஹிந்து என்ற சான்று மூலம் ஊடுருவியுள்ள பிற மதத்தவர்களையும் நீக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: மத்திய, மாநில அரசுகள் நல்ல எண்ணத்தில், ஹிந்து மதத்தில் இருக்கும் சில பிரிவினருக்கு சலுகைகள் வழங்குகிறது. அந்த சலுகைகளை பெறுவதற்காக, 'ஹிந்து' என சான்றிதழ் வைத்துக் கொண்டு, மதரீதியாகவும், மனரீதியாகவும் பிற மதங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதிகம் உள்ளனர். நீங்கள் சொல்வது போல அத்தகையவர்களை அரசு பணியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் யாருக்கும், 'டவுட்'டே வராது!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதுகுறித்து, போலீஸ் துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'துணிவிருந்தால் கைது செய்யட்டும்' என்று சவால் விட்டு வருகிறார்.

'டவுட்' தனபாலு: தடை செய்யப்பட்ட அமைப்பு அல்லது இயக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதே இப்போது, 'பேஷன்' ஆகி விட்டது. அதிலும், இளைஞர்களை தன்வசம் ஈர்க்க, ஏதாவது ஒரு பிரிவினைவாத காரணம் கூறி, அவர்களை மூளை சலவை செய்வது, சில அரசியல் தலைவர்களுக்கு வழக்கமாகி விட்டது. அவர்களில் நீங்கள் கூறும் நபரும் ஒருவர் தான் என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்டே' இல்லை!


காங்., முன்னாள் தலைவர் ராகுல்:
காஷ்மீர் பகுதியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பண மதிப்பிழப்பு மூலமாகவோ, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை நீக்கியதன் மூலமாகவோ தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு முழுவதும் தோல்வி அடைந்து விட்டது.

'டவுட்' தனபாலு: காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடந்த பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கும் பண மதிப்பிழப்பு, அரசியல் சட்டம் 370வது பிரிவு ரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களின் அறிக்கையை பார்க்கும் போது, எப்போது இதை எல்லாம் சொல்லி, மத்திய அரசை சாடலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களோ என்ற, 'டவுட்'
வருகிறது!தமிழக பா.ஜ., மாநில பொதுச் செயலர் சீனிவாசன்:
கொரோனா கெடுபிடிகளை காரணம் காட்டி, கோவில்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் கோவில்களை திறக்கவில்லை என்றால், அத்துமீறி கோவிலுக்குள் சென்று வழிபடுவோம்.

'டவுட்' தனபாலு: ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமகனாக கருதுகிறது தமிழக அரசு என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. அதனால் தான், ஹிந்து பண்டிகைகள், நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இப்படி அதிரடியாக அறிவித்தால் தான், தமிழக அரசும் வழிக்கு வருமோ என்ற, 'டவுட்'
மக்களுக்கு வந்துள்ளது!


பத்திரிகை செய்தி
: அரசியலை விட்டு சில மாதங்களாக ஒதுங்கியிருந்த ஜெயலலிதா தோழி சசிகலா, வரும் 16 முதல் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மற்றும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடங்களுக்கு அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

'டவுட்' தனபாலு: தமிழக மக்கள் புத்திசாலிகள். எந்த நேரத்தில் யாரிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதை தீர்க்கமாக உணர்ந்து செயல்படுபவர்கள். கலங்கிய குட்டையில் மீன் பிடித்து விடலாம் என எண்ணி, தோழி போன்றவர்கள் குழப்பம் விளைவிக்க நினைத்தால், அது எடுபடாது என்பதில், 'டவுட்'டே இல்லை!Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
09-அக்-202123:05:30 IST Report Abuse
M  Ramachandran அவர்களால் முடிந்தது அது தான். கூமுட்டைகள் நிறைந்த தமிழகத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-அக்-202111:57:34 IST Report Abuse
கல்யாணராமன் சு. அழகிரி, சீமானை சொல்றதுக்கு முன்னாடி, இவங்க கட்சியை சேர்ந்த "மயிலாடுதுறை-சிங்கப்பூர் புகழ்" மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானிலே போயி இந்திய அரசுக்கு எதிரா பேசினாரே, அவரை என்ன பண்ணணும், பாகிஸ்தான் படைத் தளபதியை போய் கட்டிப் பிடிச்சாரே சித்து, அவரை என்ன பண்ணணும், அப்ப்டிங்கறதையும் சொல்லணும் ....
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-அக்-202111:51:36 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\இவர்களின் சதித்திட்டம் எப்போதும் வெற்றி அடையாது என்பதிலும், 'டவுட்'டே இல்லை....\\ ..... இது ஒரு பிரச்சினை இல்லை ..... என்னோட டவுட்டெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இந்த மாதிரி சித்தாந்தங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்கள் மேல் திணிக்கமுடியுமா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X