ஸ்வப்னா கைது ரத்து ஐகோர்ட் உத்தரவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:'கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை, 'காபிபோசா' சட்டத்தின் கீழ் சுங்கத்துறை கைது செய்தது செல்லாது' என, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளாவுக்கு கடந்த ஆண்டு 30
 ஸ்வப்னா கைது ரத்து ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்:'கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை, 'காபிபோசா' சட்டத்தின் கீழ் சுங்கத்துறை கைது செய்தது செல்லாது' என, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளாவுக்கு கடந்த ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் உட்பட பலரை, என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் மீது காபிபோசா எனப்படும் அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து, சுங்கத்துறை கைது செய்தது.

காபிபோசா சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணை இன்றி ஒரு ஆண்டு தடுப்பு காவலில் வைக்கலாம்.இந்நிலையில் காபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு உள்ளதை எதிர்த்து, அவரது தாயார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காபிபோசா சட்டத்தில் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X