சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021
Share
Advertisement
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: கடந்த சில நாட்களாக காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ள வேண்டும்.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பிற மாநில அரசியல்வாதிகளின் கால் படாததால் அந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு இன்னும் 'வர்ணம்' பூசப்படாமல் இருக்கிறது.
பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: கடந்த சில நாட்களாக காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ள வேண்டும்.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பிற மாநில அரசியல்வாதிகளின் கால் படாததால் அந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு இன்னும் 'வர்ணம்' பூசப்படாமல் இருக்கிறது. அம்மாநில மக்களே திருந்தாத வரை, அங்கு பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது சிரமம் தான்!

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., தம்பிதுரை பேச்சு: ஆளும் கட்சியான, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டால் தான் திட்டங்கள் வரும் என மக்களிடம், தி.மு.க.,வினர் ஓட்டு கேட்கின்றனர். ஆனால், உண்மையான ஆளும் கட்சி, அ.தி.மு.க., தான். மத்தியில் ஆளும், பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., தான் ஆளும் கட்சி.'லாஜிக்' நன்றாக இருக்கிறதே... அப்போ, பட்ஜெட் போட்டு, வரி வசூல் செய்து, தி.மு.க., நிறைவேற்றாத திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி விட வேண்டியது தானே!

மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:
பெருமுதலாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான நம் நாட்டு பணம், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது, 'பண்டோரா பேப்பர்' என்ற புலன் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. ஊழல் முடை நாற்றம் ஊரைக் கூட்டுகிறது; நாட்டின் பொருளாதாரமோ ஆட்டம் காண்கிறது.'பண்டோரா பேப்பர்' போல தினமும் நான்கு அறிக்கைகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் வருகின்றன. அதனால் இதுபோன்ற வெளிப்பாடுகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை!


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
புலம் பெயர்ந்த தமிழர்களின் நலன்களுக்கு என, வாரியம் அமைக்கப் போவதாக அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.முதல்வர் எதை செய்தாலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் 'பாராட்டி' வருவதால், முதல்வருக்கே ஜலதோஷம் வந்திருக்கும்!



தி.மு.க., தேனி வடக்கு மாவட்ட செயலர் தங்க தமிழ்செல்வன் அறிக்கை: 'நீட்' எனும் ஆட்கொல்லித் தேர்வுக்கு எதிராக, 12 மாநில முதல்வர்களுக்கு நம் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிஉள்ளார். மாநில உரிமையை மீட்டெடுத்து, கிராமப்புற மற்றும் விளிம்பு நிலை மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவை நனவாக்குவார்.அந்த கடிதங்கள் இன்னும் பல முதல்வர்களுக்கு சென்றடையவில்லை. சென்றடைந்த கடிதங்கள், அதன் 'இருப்பிடங்களுக்கு' சென்று விட்டன!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேச்சு: எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, அ.தி.மு.க., அரசை வலியுறுத்தி வந்தார். ஆனால், அதை அவர்கள் கேட்கவில்லை. இப்போது முதல்வர் ஆன உடன், உள்ளாட்சி தேர்தலை ஸ்டாலின் நடத்துகிறார்.அப்படியே, 'உல்டா'வாக பேசுகிறீர்களே... உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, நடத்தவிடாமல் செய்தது உங்கள் கட்சி என்பது தானே, அ.தி.மு.க.,வின் பிரதான புகார்!


தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி:
தர்மபுரியில் உள்ள அதியமான்கோட்டையில், பண்டைய தமிழ் மன்னர் அதியமான், அவ்வை பாட்டிக்கு கள் கொடுத்த காட்சி, சித்திரமாக இடம் பெற வேண்டும். இதை அரசு செய்யத் தவறினால் போராட்டம் அறிவிக்கப்படும்.உங்கள் கோரிக்கை, நாளுக்கு நாள் வினோதமாக மாறி வருகிறது. அவ்வைக்கு அதியமான் கள் கொடுத்தார் என்பது ரொம்ப 'ஓவராக' இருக்கிறது. அவ்வைக்கு கள் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லையே!


ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு, திருச்சிற்றம்பலம் என பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றக் கூடிய, ஹிந்து தமிழர்கள் பெரிதும் மதித்து சொல்லக்கூடிய ஒரு சொல், திருச்சிற்றம்பலம். வேறு பெயரை வைத்துக் கொள்ளுங்கள் என்று படக்குழுவினரை, நாங்கள் வேண்டுகிறோம்.இதே மாதிரி, பிற மதத்தினர் குறித்த பெயரை வைத்திருந்தால், அந்த மதத்தினர் ரகளையில் ஈடுபட்டு, ஒரு பெரும் தொகையை, அந்த தயாரிப்பாளரிடம் இருந்து கறந்திருப்பர்... பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறார் ராம ரவிக்குமார்!


பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேச்சு:
உள்ளாட்சி தேர்தலில், வெளிப்படையான கூட்டணியை விட, உள்குத்து தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பல இடங்களில் உள்குத்து வேலைகளில் ஈடுபடுகின்றனர். திருமாவளவனை நம்பியிருந்த பட்டியலின மக்களின் ஓட்டுக்களும், பா.ஜ.,விற்கு தான், இந்த முறை கிடைக்கும்.இப்படித் தான் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்கிறீர்கள். ஆனால், அப்படி கிடைப்பதில்லையே. பட்டியலின மக்கள் பல கட்சிகளாக பிரிந்துள்ளது தான் காரணமாக இருக்குமோ?


தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு, பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால், மத்திய அரசின் திட்டங்கள் தடையின்றி கிடைக்கும்.உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு தான் பெரும்பாலான நிதியை வழங்குகிறது. முறைகேடற்ற விதத்தில் அந்த தொகை மக்களை சென்றடைய வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், நடப்பது வேறாக இருக்கிறதே!



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X