கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தொடர்ந்த அவதுாறு வழக்குகள் ரத்து

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., அரசு சார்பில், அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 50 அவதுாறு வழக்குகளை ரத்து செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுகடந்த 2011 - 2021 வரை, அ.தி.மு.க., அரசை விமர்சனம் செய்த, அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது 100க்கும் மேற்பட்ட அவதுாறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 'முன்னாள் முதல்வர் மற்றும்

சென்னை:அ.தி.மு.க., அரசு சார்பில், அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 50 அவதுாறு வழக்குகளை ரத்து செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2011 - 2021 வரை, அ.தி.மு.க., அரசை விமர்சனம் செய்த, அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது 100க்கும் மேற்பட்ட அவதுாறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 'முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் பதிவு செய்யப்பட்ட, அவதுாறு வழக்குகள் ரத்து செய்யப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், நிலுவையில் உள்ள அவதுாறு வழக்குகள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, அனைத்து அவதுாறு வழக்குகளையும் திரும்ப பெறுவதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.

அதை பதிவு செய்த நீதிபதி, மார்க்சிஸ்ட் பிரமுகர் ராமகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான 50 அவதுாறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X