முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீதம் ஓட்டுகள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீதம் ஓட்டுகள் பதிவு

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021
Share
சென்னை:ஒன்பது மாவட்டங்களில் நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 77.43 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இம்மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட

சென்னை:ஒன்பது மாவட்டங்களில் நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 77.43 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இம்மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது.

ஆனாலும், இறுதி ஓட்டுப்பதிவு சதவீத விபரங்களை வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த செய்தி, நமது நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக, ஒன்பது மாவட்ட முதற்கட்ட தேர்தலில், 77.43 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரத்தில் 84.30 சதவீதம்; செங்கல்பட்டு 66.71; வேலுார் 77.63; ராணிப்பேட்டை 80.89; திருப்பத்துார் 78.88; விழுப்புரம் 83.66; கள்ளக்குறிச்சி 82.25; திருநெல்வேலி 70.81; தென்காசி 73.96 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு வார்டுக்கு இன்று மறு ஓட்டு

வார்டு மாறி வாக்காளர்கள் ஓட்டளித்ததால், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி வார்டுக்கு, இன்று மறு ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை:தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம், சிவசைலம் ஊராட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்டுகளுக்கு, பொதுவாக ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இரண்டாவது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது வார்டை சேர்ந்த 45 வாக்காளர்கள், மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஓட்டளித்து உள்ளனர். இது குறித்த தகவலை, மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மூன்றாவது வார்டுக்கு மறு ஓட்டுப் பதிவு நடத்த அனுமதி கோரியுள்ளார். அதன் அடிப்படையில், சிவசைலம் ஊராட்சி மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, இன்று மறு ஓட்டுப்பதிவு நடத்த ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X