அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பில் அரசு பாரபட்சம்: குஷ்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:''தி.மு.க., அரசு கொரோனா தடுப்பு விவகாரத்தில், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சமாக நடந்து கொள்கிறது,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு கூறினார்.அவர் அளித்த பேட்டி:பா.ஜ.,வில் எனக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி அளித்ததற்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. தி.மு.க., அரசின் செயல்பாடு குறித்து, ஆறு மாதத்திற்கு பின் தான் கருத்து கூற

சென்னை:''தி.மு.க., அரசு கொரோனா தடுப்பு விவகாரத்தில், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சமாக நடந்து கொள்கிறது,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு கூறினார்.

அவர் அளித்த பேட்டி:பா.ஜ.,வில் எனக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி அளித்ததற்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. தி.மு.க., அரசின் செயல்பாடு குறித்து, ஆறு மாதத்திற்கு பின் தான் கருத்து கூற முடியும்.தற்போது, தமிழக காங்கிரஸ் சார்பில், மத்திய அரசுக்கு எதிராக நடந்த கூட்டத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

குறிப்பாக, யாரும் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. அதேவேளையில், தமிழக பா.ஜ., சார்பில் நடந்த கூட்டத்தில், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. கொரோனா தொற்று அனைவருக்கும் ஏற்படும். இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X