பண்டிகை கால பயணியர் கூட்டம் மும்பை விமான நிலையம் திணறல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மும்பை:மும்பை விமான நிலையத்தில் பண்டிகை கால பயணியர் கூட்டம் நேற்று திடீரென அதிகரித்தது. இதனால் வழக்கமான பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் திணறினர்.மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணியர் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. விமான நிலைய பணியாளர்கள் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் குழப்பங்கள் ஏற்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் 'வீடியோ'

மும்பை:மும்பை விமான நிலையத்தில் பண்டிகை கால பயணியர் கூட்டம் நேற்று திடீரென அதிகரித்தது. இதனால் வழக்கமான பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் திணறினர்.

மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணியர் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. விமான நிலைய பணியாளர்கள் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் குழப்பங்கள் ஏற்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் 'வீடியோ' மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளனர்.

மும்பை விமான நிலையம் தற்போது அதானி குழுமத்தால் இயக்கப்படுகிறது. நிர்வாகம் தரப்பிலான அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பண்டிகை காலம் துவங்கி உள்ளதால் பயணியர் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது.

நாட்டின் பிற முக்கிய விமான நிலையங்களிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.பயணியருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்ததால் வருந்துகிறோம். அவர்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X