சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஆர்வத்துடன் களமிறங்கினால் வெற்றி நிச்சயம்!

Added : அக் 08, 2021
Share
Advertisement
ஆர்வத்துடன் களமிறங்கினால்வெற்றி நிச்சயம்!உலர் பழ வியாபாரம் செய்து வரும், நாமக்கல் மாவட்டம், தொப்பப்பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவி: பிறந்த வீட்டிலும், கணவர் வீட்டிலும் விவசாயம் தான் பூர்வீகத் தொழில். பி.சி.ஏ., முடித்த எனக்கு, சென்னையில் ட்ரை புட்ஸ் கம்பெனியில், மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்த அசோக்குமாருடன் 2008-ல் திருமணமானது. சொந்தமாக தொழில் செய்யலாமா என


சொல்கிறார்கள்


ஆர்வத்துடன் களமிறங்கினால்வெற்றி நிச்சயம்!உலர் பழ வியாபாரம் செய்து வரும், நாமக்கல் மாவட்டம், தொப்பப்பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவி: பிறந்த வீட்டிலும், கணவர் வீட்டிலும் விவசாயம் தான் பூர்வீகத் தொழில். பி.சி.ஏ., முடித்த எனக்கு, சென்னையில் ட்ரை புட்ஸ் கம்பெனியில், மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்த அசோக்குமாருடன் 2008-ல் திருமணமானது. சொந்தமாக தொழில் செய்யலாமா என கணவரிடம் கேட்க, அவரும் சம்மதித்தார்.
இந்நிலையில் தான், நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் 'நீட்ஸ்' திட்டத்தில், 25 சதவீத மானியத்தில் 1 கோடி ரூபாய் தொழில் கடன் தருவதாக அறிவிப்பு வெளியானது. விண்ணப்பித்து பயனாளியாக தேர்வானேன்.'ட்ரை புட்ஸ்' விற்பனை செய்யலாம் என ஐடியா கொடுத்த கணவர், வேலையை ராஜினாமா செய்து ஊர் வந்துவிட்டார்.எங்களுக்கு சொந்தமான 4,000 சதுர அடி இடத்தில் கட்டடம் கட்டி, பெங்களூரில் உள்ள வடிவமைப்பாளரிடம் ஏழு வகை மிஷின்களை வடிவமைத்து
வாங்கினோம்.'ஏ.ஆர்.என். இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கி, 'டேட் கிங்' என்ற பிராண்டை வெளியிட்டோம்கிராமத்தினர் கிண்டலையும் கடந்து, ஈரான், ஈராக் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து பேரீச்சம் பழங்களை இறக்குமதி செய்தோம்.
குளிர்சாதன வசதியுடைய வாடகை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, தேவையான போது பதப்படுத்தி, 'பேக்கிங்' செய்தோம்.மும்பை, டில்லியில் இருந்து பாதாம், பிஸ்தா, முந்திரி, அத்திப்பழம், பூசணி விதை, கறுப்புத் திராட்சை, மஞ்சள் திராட்சை, உலர் நெல்லிக்காய், வால்நட் என உலர் உணவுப் பொருட்களை வாங்கினோம். கறுப்பு பேரீச்சம்பழத்தில் சிரப், சாக்லேட், அல்வா செய்தோம்.
பொருட்களை தரமாக தயாரித்தாலும், மார்க்கெட்டிங் பிடிக்க ஆரம்பத்தில் சிரமப்பட்டோம். தற்போது,- நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கோவை என பல மாவட்டங்களில், 1,200 கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறோம். 'ஆன்லைன்' வாயிலாகவும் விற்பனை செய்கிறோம். இனி டீலர்கள் மூலமாக விற்பனை செய்ய உள்ளோம்.
எங்கள் கம்பெனியில் 20 பேர் வேலை பார்க்கின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 200 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேறும் லட்சியத்தோடு செயல்படுகிறோம். எங்க கம்பெனி பிராண்டை, குளோபல் பிராண்டா மாற்ற 'ஆப்' உருவாக்கி உள்ளோம். 'நம்மால் முடியும்' என்ற ஆர்வத்துடன் களமிறங்கினால்,
நிச்சயம் வெற்றி தான்.


குறைந்த அளவில் தான்ஆரம்பிக்கணும்!நாட்டுக்கோழிகளை வளர்த்து வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல்: ஆரம்பக் காலத்தில், பிராய்லர் கோழி கறிக்கடை தான் வைத்திருந்தேன். கடைக்கு வருபவர்கள், 'நாட்டுக்கோழி இருக்கா'ன்னு கேட்டபோது தான், அதை வளர்க்க
தீர்மானிச்சேன்.முதலில், இரண்டு நாட்டுக்கோழிகளை வாங்கி வளர்த்து, அதன் மூலமாக கோழிகளைப் பெருக்கினேன். ஒரு கட்டத்தில் 500 தாய்க்கோழி
களாக பெருகவே, இதை தொழிலாக செய்ய ஆரம்பித்தேன். இப்போது 6,000 கோழிகள், 300 சேவல்கள் உள்ளன. கோழிக் குஞ்சுகளையும், வயதான கோழிகளை கறிக்கும் விற்று வருகிறேன்.திறந்தவெளியில் வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான் நாட்டுக்கோழி குஞ்சுகளைக் கொடுப்பேன். அதேபோல், 1,000 குஞ்சுகள் கேட்பவர்களுக்கு 100க்கு மேல் கொடுக்க மாட்டேன்.
எங்களிடம் இப்போது இருப்பது எல்லாம் தாய்க்கோழிகள் என்பதால், கறிக்குக் கொடுப்பதில்லை; முட்டைக்காக வைத்திருக்கிறோம். இவற்றை கூண்டில் தான் வளர்க்க வேண்டும் என்பதால், தேவையான தீவனம், தண்ணீர் எல்லாம் கிடைக்கும்படி அமைத்துள்ளேன். முட்டைக்காக கோழிகள் வளர்ப்பவர்கள், கோழிகளுக்கு, 'கால்சியம்' சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். 'கால்சியம்' பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, கிளிஞ்சல்களை கொடுக்கலாம். இது, கால்நடை தீவன கடைகளில் கிடைக்கிறது. இதனால், முட்டை தரமாக
இருக்கும்.முட்டைகளை செயற்கை முறையில் தான் கருவூட்டல் செய்கிறோம். கரு ஆரோக்கியமாக இருக்க, முட்டையை எடுத்தவுடனேயே துடைத்து, 'ஏசி' அறையில் வைத்து விடுவோம்.
ஆரம்பத்தில், முட்டை குஞ்சு பொரிக்க வெளியில் கொடுத்து வாங்கி வந்தோம். இப்போது சொந்தமாக குஞ்சு பொரிப்பான் அமைத்து விட்டேன். வாரம் 7,000 குஞ்சுகள் வரைக்கும் பொரிக்கும். அம்மை தடுப்பூசி போட்ட ஒருநாள் குஞ்சு, 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.கோழிக்குஞ்சுகளை தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் என, பல மாநிலங்களுக்கும் விற்பனை செய்கிறேன். நாட்டுக்கோழியைப் பொறுத்தவரை, குறைந்த அளவில் தான் ஆரம்பிக்கணும்; அப்போது தான் அதில் ஜெயிக்க முடியும்.
இதை புரிந்து கொள்ளாமல் அதிக கோழிகளை வாங்கி பராமரிக்க முடியாமல் நஷ்டமடைகின்றனர். எனவே, குறைந்த எண்ணிக்கையில் வளர்க்க ஆரம்பித்து, அந்த அனுபவம் மூலம் அதிக கோழிகளை பராமரித்தால் வெற்றி கிடைக்கும்.
தொடர்புக்கு 94430 25464.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X