அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி தட்டுப்பாடு: பன்னீர்செல்வம் யோசனை

Updated : அக் 10, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:-'ஒடிசா மாநிலம் சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில், நான்கு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. கடந்த மாதம் முதல், இந்திய
 நிலக்கரி தட்டுப்பாடு ,பன்னீர்செல்வம் யோசனை

சென்னை:-'ஒடிசா மாநிலம் சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில், நான்கு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. கடந்த மாதம் முதல், இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் பெறப்படும் நிலக்கரியின் அளவு குறைந்து வருகிறது.


பற்றாக்குறை

தமிழகத்தின் தினசரி நிலக்கரி தேவை, 62 ஆயிரம் டன் என்ற நிலையில், 60 சதவீதம் தான் அனுப்பப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் நிலக்கரி இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.


அனுமதி

இந்நிலைமை நீடித்தால், ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப் படுவர். பொருட்களின் விலை உச்சத்தை தொடக்கூடிய நிலைமை ஏற்படும். இதை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், மாநில அரசுக்கு உண்டு. எனவே, மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி வினியோகிக்கப் படுவதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஒடிசா மாநிலம் சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியை பெற வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nelson.n - viralli,இந்தியா
09-அக்-202115:10:12 IST Report Abuse
nelson.n எவர் நல்லது சொன்னாலும் அந்த கருத்தை பற்றி சிந்தித்து செயல் படுத்தலாம் அதை விட்டு சில கொசுக்களின் தொல்லையை விட்டு விடுங்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-அக்-202107:38:24 IST Report Abuse
Kasimani Baskaran நிலக்கரியை அதிமுக சாப்பிட்டு விட்டது என்று மந்திரி சொன்னார். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் கிடையாது. போகிற போக்கைப் பார்த்தால் டாஸ்மாக் சரக்கை ஊற்றித்தான் அனல் மின்நிலையங்களை ஓட்ட முடியும் போல இருக்கிறது.
Rate this:
Cancel
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
09-அக்-202107:10:19 IST Report Abuse
Guna Gkrv சும்மா இருங்க போதும் ஆட்சி செய்யும் போது ஒரு மண்ணும் எடுக்கல இப்ப அது இதுன்னு பேசுறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X