பயங்கரவாதிகளை வேட்டையாட உள்துறை அமைச்சர் உத்தரவு

Updated : அக் 10, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து ஏழு பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை பிடிக்க, பயங்கரவாத செயல்களை தடுப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள் அடங்கிய அதிரடிப் படையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ளார்.அச்சம்ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் தலைமையாசிரியர், ஒரு பெண் உட்பட ஏழு பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான
பயங்கரவாதிகள், வேட்டை,அமைச்சர் உத்தரவு

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து ஏழு பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை பிடிக்க, பயங்கரவாத செயல்களை தடுப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள் அடங்கிய அதிரடிப் படையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ளார்.


அச்சம்

ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் தலைமையாசிரியர், ஒரு பெண் உட்பட ஏழு பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது.

இதில் உளவுத் துறையினர், பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது காஷ்மீரில் அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதிகளை உடனே பிடித்து வழக்கு பதிவு செய்யும்படி அமித் ஷா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு தலைவர் தபன் தேகா தலைமையில் நிபுணர் குழுக்கள் காஷ்மீர் சென்றுள்ளன.

காஷ்மீரில் சமீப காலமாக சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள அனைத்து ஓட்டல் அறைகளும் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. இதனால் ஸ்ரீநகரில் பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் அங்கு பயங்கரவாதிகள் ஹிந்துக்களை குறி வைத்து கொலை செய்து வருவது, சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


வன்முறை



இது குறித்து உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆப்கனை தலிபான் கைப்பற்றிய பின், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரில் வன்முறையை கட்டவிழ்த்து விடத் துவங்கியுள்ளன. சமீபத்தில், பாக்., உளவுத் துறை தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜூம் நியமிக்கப்பட்டதும் காஷ்மீரில் வன்முறை அதிகரித்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகளுக்கு பயந்து, காஷ்மீரை விட்டு வெளியேறிய ஹிந்து பண்டிட்டுகள் தற்போது மீண்டும் திரும்பி வருகின்றனர். அவ்வாறு வரக்கூடாது என அவர்களை அச்சுறுத்தவே, இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பணியாத மத்திய அரசு, பயங்கரவாதிகளை உடனடியாக பிடிக்கும்படி பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
09-அக்-202119:12:21 IST Report Abuse
M  Ramachandran மூர்க்க மதத்தை சேர்ந்த நாடுக்களில் செய்யும் தண்டனைகளய் இஙகு அமல் படுத்தினால் திமிர்பிடித்த பேச்சு தானாக அடங்க்கும்.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்அவர்களை நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்கிறோமோ? பின்னர் அவர்கள் பாணியையே நாமும் பின்பற்றுவோமோ? ஆக நமக்கு அவர்களே வழிகாட்டிகளோ"...
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
15-அக்-202105:37:26 IST Report Abuse
Milirvanமொஸாட் வழிமுறை சரியாக இருக்கும்..லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜூம்க்கும் உரைக்கும்.. கூடவே நீளப்பெயர் புல்லுருவிகளுக்கும்.....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
09-அக்-202119:10:13 IST Report Abuse
M  Ramachandran முதலில் நாட்டிற்கு எதிராக செயல் படும் சில காட்டிக்கொடுக்கும் ஐந்தாம் படை கும்பலை ஒளித்து கட்டிவிட்டு பிறகு தீவிரவாதிகள் பக்கம் பார்வையை திருப்புங்கள். இந்த இந்திய நாட்டின் விளிம்புகளில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு மத சார்பின்மை என்ற போர்வயில் ஒளிந்திருக்கும் எட்டப்பர்களை கரையான்களய் இரும்பு கரம் கொண்டு ஒளித்து காட்டுங்கள். பிறகு தானாக தீவிரவாதிகள் மறைந்து விடுவார்கள். கலியெடுங்கள்.
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
09-அக்-202117:50:00 IST Report Abuse
Gopal இந்த தருணத்தை வைத்து பாகிஸ்தானை ஒழித்து கட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X