பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்த முடிவு

Updated : அக் 10, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தின் கடலோர பாதுகாப்பு தொடர்பான, உயர்நிலை குழுவின் ஏழாவது கூட்டம், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் நடந்தது. தலைமை செயலர் இறையன்பு, கடலோர பாதுகாப்பு கமாண்டர் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார் சிங் தலைமை வகித்தனர். உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, பல்வேறு துறை செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், கடலோர காவல் படை அதிகாரிகளும்
 கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்த முடிவு

சென்னை:தமிழகத்தின் கடலோர பாதுகாப்பு தொடர்பான, உயர்நிலை குழுவின் ஏழாவது கூட்டம், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் நடந்தது.

தலைமை செயலர் இறையன்பு, கடலோர பாதுகாப்பு கமாண்டர் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார் சிங் தலைமை வகித்தனர். உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, பல்வேறு துறை செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், கடலோர காவல் படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கடல் வழியே போதை பொருட்கள், ஆயுதங்கள், தங்கம், அரிய கடல் பொருட்கள் போன்றவை கடத்தப்படுவதை தடுக்க, கடலோர காவல் படையினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.இவற்றை தீவிரப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. சமீப காலமாக, போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
09-அக்-202119:14:59 IST Report Abuse
M  Ramachandran இதெல்லாம் சும்மா உதார். அது பாட்டிலும் நாலாராசியுடன் நடந்து கொண்டு தான் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X