வருமான வரி சோதனையில் ரூ.250 கோடி கறுப்பு பணம்| Dinamalar

வருமான வரி சோதனையில் ரூ.250 கோடி கறுப்பு பணம்

Added : அக் 08, 2021
Share
புதுடில்லி:மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ரயில்வே ஒப்பந்ததாரர் நிறுவனம் மற்றும் சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தில், வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கறுப்பு பணம் கண்டறியப்பட்டு உள்ளது.மேற்கு வங்கத்தில் உள்ள ரயில்வே ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தி

புதுடில்லி:மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ரயில்வே ஒப்பந்ததாரர் நிறுவனம் மற்றும் சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தில், வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கறுப்பு பணம் கண்டறியப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள ரயில்வே ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தி நிறுவனம் ஆகியவை கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாமல் வருமான வரி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்நிறுவனங்களுக்கு சொந்தமான கோல்கட்டா, கவுகாத்தி, ஷில்லாங் மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது சிமென்ட் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கணக்கில் வராத விற்பனை மற்றும் போலி செலவு கணக்குகளை உருவாக்கி மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.சில வெளிநாட்டு நிறுவனங்களுடனான வர்த்தகம் மற்றும் கணக்கில் காட்டப்படாத வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக இந்நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கியது தெரியவந்துள்ளது.

இந்நிறுவனங்களின் வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் 110 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிலம் மற்றும் சொத்துக்கள் விற்பனை பத்திரங்களும் சிக்கி உள்ளன. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X