மசூதியில் குண்டு வெடிப்பு ஆப்கனில் 100 பேர் பலி

Added : அக் 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
காபூல்:ஆப்கானிஸ்தானில் மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 100 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிருந்தே ஆங்காங்கே வன்முறை மற்றும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் உள்ள மசூதியில்
 மசூதியில் குண்டு வெடிப்பு ஆப்கனில் 100 பேர் பலி

காபூல்:ஆப்கானிஸ்தானில் மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 100 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிருந்தே ஆங்காங்கே வன்முறை மற்றும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் உள்ள மசூதியில் சிறப்புத் தொழுகை நடந்தது.

தொழுகை முடிந்த அடுத்த சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்தன. ஏராளமானோர் உடல் சிதறி அதே இடத்தில் பலியாகினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர்.

இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:குண்டூஸ் மசூதியின் இமாமை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இமாம் உட்பட 100 பேர் பலியாகியுள்ளனர். தலிபான்களின் சிறப்பு படையினர் குண்டூஸ் நகரத்தில் விசாரணையை துவக்கிஉள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

சன்னி பிரிவை சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இங்கு சிறுபான்மையினரான ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது, சன்னி பிரிவினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
09-அக்-202109:20:56 IST Report Abuse
M S RAGHUNATHAN அமைதி மார்க்கத்தின் முகத்தை பாருங்கள். இவர்களை வளர விட்டால் நம் தேசத்திலும் இது தான் நடக்கும். ஏன் முஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்கிறார்கள் ? யாராவது பதில் சொல்லுங்களேன்.
Rate this:
Cancel
09-அக்-202107:21:30 IST Report Abuse
Velantex Ram ஆமா. நாங்க நினைத்தால், ராணுவமே ... சமம், பூம் னு ஒரே பாம்தான் எல்லாம் தரைமட்டம்னு சொல்லிக்கொடுங்க , அப்புறம் இப்படிதான் நடக்கும்.||
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X