வீடியோ கான்பரன்ஸ் விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி| Dinamalar

'வீடியோ கான்பரன்ஸ்' விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி

Added : அக் 08, 2021
Share
புதுடில்லி:'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக வழக்குகளை விசாரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. இயல்பு நிலை திரும்பி, நீதிமன்றங்கள் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என விரும்புகிறோம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி முதல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகவே நடந்து வருகின்றன.கொரோனா

புதுடில்லி:'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக வழக்குகளை விசாரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. இயல்பு நிலை திரும்பி, நீதிமன்றங்கள் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என விரும்புகிறோம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி முதல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகவே நடந்து வருகின்றன.கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்த நிலையில், கடந்த மாதம் முதல் உச்ச நீதிமன்றத்தில், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நேரடி விசாரணை துவங்கியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தன்னார் தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பொது நல மனுவில், 'நீதிமன்றங்களில் 'ஆன்லைன்' வழியாக விசாரணை நடப்பது மனுதாரர்களின் அடிப்படை உரிமை என அறிவிக்க வேண்டும்' என, கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் வீடியோ கான்பரன்சிங் வழியாக நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. இயல்பு நிலை திரும்பி, நேரடி விசாரணை நடப்பதைத் தான் விரும்புகிறோம். நீதிமன்றங்களில் அமர்ந்து, திரையை பார்த்து பேசுவதில் எந்த திருப்தியும் இல்லை.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நேரடி விசாரணையும் நடத்தப்படுகிறது. ஆனால், நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஒருவர் கூட வரவில்லை. அவர்கள் தங்கள் அறையில் அமர்ந்து விசாரணையில் பங்கேற்பதை தான் விரும்புகின்றனர். கொரோனா பரவல் முடிந்து விட்டால் நேரடி விசாரணை துவங்கிவிடும். ஆன்லைன் வழியான விசாரணை தேவையில்லாமல் போய்விடும்.

மனுதாரர்களுக்கு ஆன்லைன் விசாரணை அடிப்படை உரிமை என அறிவித்தால், அதன் பின் நீதிமன்றங்களுக்கு யாரும் வரமாட்டார்கள். ஆன்லைன் விசாரணை வழக்கமாகிவிட்டால் நீதிமன்ற அறைகளில் நீதிபதிகள் மட்டுமே அமர்ந்திருப்பர். நாட்டின் தொலை துார பகுதிகளில் இருந்தும், வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆஜராவது தான் நடக்கும். தொற்று பரவல் காலத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆன்லைன் வழி விசாரணைக்கு சம்மதித்தோம்.
ஆன்லைன் வழியாக விசாரணை நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், வழக்கறிஞர்களின் முகங்களை நேரில் பார்த்து விசாரணை நடத்துவதை தான் விரும்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X