பொது செய்தி

தமிழ்நாடு

வேகமாக 'என்ட்ரி' குடுக்குது டெங்கு! கொஞ்சம் கொஞ்சமாக குறையுது கொரோனா தொற்று

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:பருவமழை பெய்து வருவதால், கோவையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மழைக்காலங்களில், ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதன்மூலம், டெங்கு பாதிப்பும் அதிகரித்து விடுகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதையொட்டி, அரசு

கோவை:பருவமழை பெய்து வருவதால், கோவையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மழைக்காலங்களில், ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதன்மூலம், டெங்கு பாதிப்பும் அதிகரித்து விடுகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதையொட்டி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோரின் விபரங்களை, சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கோவையில் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை 219 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனைமலை, காரமடை, மதுக்கரை, பொள்ளாச்சி, சர்க்கார்சாமக்குளம், சூலுார், அன்னுார், கிணத்துக்கடவு, பெ.நா.பாளையம், பொள்ளாச்சி (தெற்கு), சுல்தான்பேட்டை, தொண்டாமுத்துார், ஆகிய 12 வட்டாரங்களில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.டெங்கு தடுப்புக்கென கொசு மருந்து, புகை அடிப்பதற்கு தேவையான மருந்துகள், எல்.பி.ஜி.,சிலிண்டர் ஆகியவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும், தங்கள் வீடுகளை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்க விடாமலும், கொசுப்புழு உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்வது அவசியம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X