பொது செய்தி

தமிழ்நாடு

கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் மரணம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:திரைத்துறையில், 1,000த்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை எழுதிய கவிஞர் பிறைசூடன், 65, மாரடைப்பால் காலமானார்.சென்னை நெசப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கவிஞர் பிறைசூடன், சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் 1,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். ஆன்மிகவாதியும், இலக்கியவாதியுமான பிறைசூடன், திரைப்பட எழுத்தாளர் சங்க செயலராகவும்

சென்னை:திரைத்துறையில், 1,000த்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை எழுதிய கவிஞர் பிறைசூடன், 65, மாரடைப்பால் காலமானார்.

சென்னை நெசப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கவிஞர் பிறைசூடன், சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் 1,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். ஆன்மிகவாதியும், இலக்கியவாதியுமான பிறைசூடன், திரைப்பட எழுத்தாளர் சங்க செயலராகவும் இருந்துள்ளார்.

சில படங்களில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். பல பக்தி பாடல்களை எழுதியுள்ளார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் ஜொலித்தார். திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த இவர், 1985ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த சிறை படம் வாயிலாக, பாடலாசிரியராக அறிமுகமானார். சமீபத்தில், 'ஆஸ்கார்' விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் இருந்தார். தமிழக அரசின், 'கபிலர் விருது' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். பிறைசூடன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரைத் துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X